2 குழந்தைகள் இருக்கு.. ஆனாலும், தனது காதலியை சிறையில் திருமணம் செய்யும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!

2 குழந்தைகள் இருக்கு.. ஆனாலும், தனது காதலியை சிறையில் திருமணம் செய்யும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே! - Daily news

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தற்போது சிறையில் இருக்கும் நிலையில், தன்னை விட 13 வயது குறைந்த தனது காதலியை இன்று அவர் சிறையிலேயே திருமணம் செய்துகொள்கிறார்.

“விக்கிலீக்ஸ்” என்ற வார்த்தையை கேட்டாலே, உலக நாடுகளே அஞ்சி நடுங்கிய காலமும் இருந்தது.

அதாவது, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் பல்வேறு நாடுகளின் அரசாங்க ரகசிங்ககளை ஹேக் செய்து, அதனை ஊடகத்தில் வெளியிட்டார். இவை யாருவும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

குறிப்பாக, ஆப்கானிஸ்தான், இராக் போர்கள் தொடர்பான லட்சக்கணக்காக கசிந்த ஆவணங்களை எல்லாவற்றையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு தகவலைப் பெற்று வெளியிட்டு சதி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே, அந்நிறுவனத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், அமெரிக்காவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

முக்கியமாக, “கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இராக்கில், அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் இருந்தபடி பொது மக்களை சுட்டுக் கொன்றதைக் காட்டும் காட்சிகள் உள்ளிட்ட வீடியோக்களை” விக்கிலீக்ஸ் கசியவிட்டதும், அதில் அடங்கியது. 

இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தான், “இங்கிலாந்தில் உள்ள பெல்மார்ஷ் சிறையில், ஜூலியன் அசாஞ்ச் தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அந்த சிறை நிர்வாகம் அனுமதி” வழங்கி உள்ளது.

என்றாலும், “விக்கிலீக்ஸ் நிறுவனர், ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோருக்கு ஏற்கெனவே 2 மகன்கள் உள்ள நிலையில், தற்போது இவர்கள் இருவரும் முறைப்படி சிறையில் இருந்த படியே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து உள்ளனர்.

அதாவது, தற்போது 50 வயதான ஜூலியன் அசாஞ்சே, தனது 37 வயது காதலியான ஸ்டெல்லா மோரிசை, இதற்கு முன்பாகவே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். 

அத்துடன், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக  ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக அவர் பணியாற்றி வருகிறார்.

பெல்மார்ஷ் சிறையில் அவர் அடைக்கப்படும் முன்பாகவே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் 7 ஆண்டுகளாக தங்கி இருந்து உள்ளார். அப்போது, கடந்த 2011 ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் வழக்கறிஞரான ஸ்டெல்லா மோரிஸ்க்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதனால், அவர் கரு உற்ற நிலையில், இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தனர். 

அதன் தொடர்ச்சியாகவே, அவர் சிறைக்கு சென்ற நிலையில், தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை, தென் கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தார். இதற்கு, அந்த சிறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment