“100 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி” மனம் திறந்த விராட் கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது 100 வது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள நிலையில், தற்போது மனம் திறந்து பேசி உள்ளார்.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
அதன் படி, “இந்தியா - இலங்கை மோத இருக்கும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியானது, நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு கலந்துகொண்டு விளையாட உள்ளார். ஆனால், இந்த கிரிக்கெட் போட்டியனது விராட் கோலிக்கு 100 வது டெஸ்ட் என்பது சிறப்பம்சமாக உள்ளது.
இதன் காரணமாக, இன்றைய தினம் து குறித்து பிசிசிஐ ஒரு சிறப்பான வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், விராட் கோலி தனது 100 வது டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய உள்ள விராட் கோலி, “நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன்” என்று, நான் ஒரு போதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
அத்துடன், “எனக்கு, இது மிக நீண்ட பயணம் என்றும், நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன்” என்று தெரிவித்த அவர், “நான் எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்து உள்ளேன்” என்றும், அவர் நினைவு கூர்ந்து உள்ளார்.
மேலும், “இந்த சமயத்தில் நான் கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன்” என்றும், அந்த வீடியோவில் விராட் கோலி கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய விராட் கோலி, “எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது ஒரு பெரிய தருணம் என்றும். என்னைப் பொறுத்த வரையில் இந்த டெஸ்ட் போட்டி குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்” என்றும், பெருமிதத்தோடு தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக, “நான் தனிப்பட்ட முறையில் குறைந்த ரன்களை இலக்காக கொண்டு ஒரு போதும் விளையாடியதே இல்லை என்றும், நான் நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது என்றும், நான் ஜூனியர் கிரிக்கெட்டில் பெரிய இரட்டை சதங்களை அடித்து உள்ளது பெருமையாக இருக்கிறது” என்றும், அவர் நினைவு கூர்ந்து உள்ளார்.
“முதல் தர கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பே 7 இரட்டை சதம் விளாசியுள்ளேன் என்றும், அணி வெற்றி பெற வேண்டும், 2 புள்ளிகள் பெற வேண்டும், முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதிலேயே நான் எப்போதும் குறியாக இருந்திருக்கிறேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.
“இந்த தருணங்கள் எல்லாமே, நான் யார் என்பதை எனக்கே உணர்த்தியது என்றும், ரன்கள் அடிப்பது எனக்கு கொண்டாட்டமாக இருக்கும்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.
“டெஸ்ட் கிரிக்கெட் தான் நாம் யார் என்று என்பதை உணர்த்தும் என்றும், டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தான் நாம் அதனை உணர முடியும் என்றும், இதற்காகவே டெஸ்ட் கிரிக்கெட் வாழ வேண்டும்” என்றும், அவர் பேசி உள்ளார்.
முக்கியமாக, “என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட்” என்றும், விராட் கோலி அந்த வீடியோவில் பெருமையோடு நினைவு கூர்ந்துள்ளார்.