சுட்டிஸ்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சுட்டிஸ்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை! - Daily news

தமிழகத்தில் 1 முதல் 5- ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க  பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது.

ஒமிக்ரான் வைரஸ்  இந்தியாவிலும் பரவியிருந்தது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தது. அதனைத்தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமிக்ரான் கணிசமாக குறைந்ததையடுத்து தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை விளக்கிக்கொண்டது. இருப்பினும் முககவசம் அணிவதும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை மட்டும் செய்யவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

இந்நிலையில் இந்த கொடிய வைரஸ் கொரோனா பரவல் காரணமாக  கடந்த 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மேலும் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களுக்கு  பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புளே நடத்தப்பட்டு வந்தன. கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் முதல் கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனாலும் அதனைதொடர்ந்து வைரஸ் உருமாற்றம் அடைந்து அதற்குள்ளாக மீண்டும் கொரோனா 3-வது அலை வேகமெடுத்தது. ஒருபுறம் ஒமைக்ரான் பரவலும் அதிகரித்ததால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பிறகு ஒருவழியாக கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும் என்பதற்காக வாரத்தின் 6 நாட்களும் அதாவது திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால்  1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை  அளிப்பது குறித்து  அரசு பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இனி  சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a Comment