இன்று இந்தியாவிற்கு 1000 வது ஒரு நாள் போட்டி! இந்திய அணி பந்துவீச்சு..
இந்தியா இன்று விளையாடும் கிரிக்கெட் போட்டியானது 1000 வது ஒரு நாள் போட்டி என்பதால், விஷேச கவனம் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், இன்றைய தினம் அகமதாபாத்தில் தொடங்கி உள்ளது.
இன்று முதல் நடைபெறும் இந்த போட்டிகள் ஒரு நாள் மற்றும் டி20 தொடர்கள் என்று வரும் 20 ஆம் தேதி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
அதன் படி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளுமே விளையாட உள்ளன.
அத்துடன், “கொரோனா பரவல் காரணமாக ஆமதாபாத்தில் நடைபெற உள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று, முன்னதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.
ஆனாலும், இந்த கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முக்கிய பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பவுலர் சைனி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆமதாபாத் வந்தடைந்த நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், இந்திய அணி வீரர்கள் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், மற்றும் பவுலர் சைனி என மொத்தம் 4 இளம் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அப்போது உறுதியானது.
மேலும், இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 4 வீரர்கள் மற்றும் 3 கிரிக்கெட் அணியின் முக்கிய நிர்வாகிகள் என மொத்தம் இந்திய அணி தரப்பில் 7 பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகி உள்ளது.
“கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடையும் வரையில், அவர்கள் தனிமையில் இருப்பார்கள்” என்றும், பிசிசிஐ தெரிவித்தது. இதனால், இந்திய அணியில் புதிய இளம் வீரர்களுக்கு இந்த முறை அதிகம் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
இன்றைய போட்டியில் நிறைய புது முகங்கள் கலந்து கொள்கின்றனர். அதன்படி, வாஷிங்டன் சுந்தர், இந்திய அணியில் மீண்டும் திரும்பி உள்ளார்.
குறிப்பாக, இந்த ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா கேப்டனாக தலைமை ஏற்றுள்ளார்.
ரோகித் சர்மா கேப்டனாக பொருப்பேற்கும் முதல் ஒரு நாள் போட்டி இது என்பதால், அதிகம் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
இவற்றுடன், இதுவரை கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த விராத் கோலி, தற்போத கேப்டன் பொறுப்பு இல்லாமல் விளையாடும் முதல் ஒரு நாள் போட்டி இது என்பதாலும், இந்த போட்டியது அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மிக முக்கியமாக, இந்தியா இன்று விளையாடும் இந்த போட்டியானது, 1000 வது ஒரு நாள் போட்டி என்பதால், தனி கவனம் பெற்று உள்ளது.
இதனால், இன்றைய போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணி வீரர்களுக்கும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுவரை இந்தியா விளையாடிய 999 போட்டிகளில் 518 போட்டிகளில் வெற்றிப் பெற்று உள்ளது. 431 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது. 9 போட்டிகள் சமனில் முடிந்து இருக்கின்றன. 41 ஆட்டங்கள் கைவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, பந்து வீச்சு தேர்வு செய்து உள்ளார்.