ஒலிம்பிக்கில் விறுவிறுப்பான ஆட்டம்.. அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! பதக்கம் உறுதி!!
டோக்கியோ ஒலிம்பிக்கில் விறுவிறுப்பாக நடந்த பேட்மிண்டன் மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து, அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்த உறுதி
செய்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 8 வது நாளாக இன்று பல்வேறு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அத்துடன், 7 வது நாளான நேற்று பெரும்பாலான போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கத்தை நோக்கியே பயணித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, இன்றும் 2 வீராங்கனைகள் இந்தியாவின் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
அதன் படி, பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், உலக சாம்பியனும், தரவரிசையில் 7 வது இடத்தில் இருப்பவரும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 12 வது இடத்தில் உள்ள டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மியா பிளிக்பெல்ட்டை எதிர்கொண்டு விளைாயடினார்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 41 நிமிடத்தில், 21-15, 21-13 என்ற நேர் செட்டில் பிளிக்பெல்ட்டை வீழ்த்தி வெற்றிப் பெற்றார். இதன் மூலமாக, பி.வி.சிந்து கால் இறுதிக்குள் கால்பதித்தார்.
இந்த தொடரில் இது வரை ஒரு செட்டை இழக்காமல் வெற்றி நடை போட்டு வரும் பி.வி. சிந்து, கால் இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது 5 வது இடம் வகிப்பவருமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகானே யமாகுச்சியை இன்று எதிர்கொண்டார்.
பெறும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனையை 21-13, 22-20 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
இதன் மூலமாக, அவர் ஒலிம்பிக் ஒற்றையர் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார். இதனால், சி.பி. சிந்துவிற்கு தற்போது ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.
முக்கியமாக, இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில் சிந்து கடைசியாக ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை தோற்கடித்திருந்தார்.
அதே போல், டோக்கியோ ஒலிம்பிக்கில் கோகுக்கிகன் அரங்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான குத்துச்சண்டை 64-69 கிலோ பிரிவு போட்டிகளின், 2 வது காலிறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லோவ்லினா போர்கோஹெய்ன், சீனாவின் தைபேயின் நீன் சின்னை வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
அத்துடன், குத்துச் சண்டை போட்டிகளில் பொதுவாக 2 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும் நிலையில், லோவ்லினா இந்த வெற்றியால், அரையிறுதிப் போட்டிக்கு லோவ்லினா தற்போது முன்னேறி இருக்கிறார். இதன் காரணமாக, இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தை உறுதிப்படுத்தி இந்திய ரசிகர்களையும்
லோவ்லினா மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.