கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் வைகையாற்றில் மக்கள் யாரும் இறங்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் வைகையாற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால், கரையோரங்களில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்களாக கொரோனாவினால் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும், திருவிழாக்களும் நடைபெறாமல் இருந்தது. மேலும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் அனைவர்க்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது மேலும் கொரோனா தளர்வுகளும் தமிழ்நாடு அரசு நீக்கியது. இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது.
அதனைத்தொடர்ந்து மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தேறியது. திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடந்தேறியது.
இந்நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் வைகையாற்றில் மக்கள் யாரும் இறங்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் வைகையாற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால், கரையோரங்களில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, நேற்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவின் 11-வது நாளான இன்று மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
மேலும் கீழமாசி வீதியிலிருந்து புறப்பட்ட தேர் தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்தது. பல்லாயிரக்காண பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொள்வர். நாளை அதிகாலை 5.50 மணி முதல் 06.20 மணிக்குள் வைகை ஆற்றில் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
இந்நிலையில் முன்னதாக சுந்தரராஜ பெருமாள் மூலஸ்தனத்திலிருந்து நேற்று 6.30 மணியளவில் தங்க பல்லக்கில் அழகர் புறப்பட்டு, இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, நாளை அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. இதனையொட்டி, மக்களும் ஏராளமானோர் ஆற்றில் இறங்குவர். இந்நிலையில் வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், பொது மக்கள் ஆற்றில் இறங்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஆற்றின் கரையோரங்களில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.