IPL2022: 2 CSK வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி! சிக்கலில் சிக்கித் தவிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
IPL2022 சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய சிக்கலாக, 2 #CSK வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், சென்னை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் மண்ணை கவ்விய நிலையில் தான், எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் நேற்று முன் தினம் லக்னோ அணியுடன் மோதிய நிலையில், சரியான பவுளர்கள் இல்லாமல் மீண்டும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதனால், நடப்பு 15 வது #IPL சீசனில் முன்னாள் சாம்பியனான #CSK அணிக்கு அடி மேல் அடி விழுந்துக்கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அதாவது, #CSK விளையாடி தனது முதல் போட்டியில் முக்கிய வீரரான மொயீன் அலி இல்லாமல் களம் கண்டு தோல்வியை தழுவியது.
அடுத்து வியைாடிய 2 வது போட்டியில் தீபக் சஹார் இல்லாமல் பந்து வீச்சில் சொதப்பி வைத்தது.
இந்த பிரச்சனைகளுக்கு முன்பாகவே, #CSK அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் தோனி விலகினார்.
இப்படியாக, பல சிக்கல்களுக்கு மத்தியில் தான், இந்த தொடரில் களமிறங்கி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும், CSK சென்னை அணி தோல்வியை சந்தித்து உள்ளது. இப்படியாக, #IPL வரலாற்றிலேயே சென்னை அணி, முதல் 2 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த நிலையில் தான், #CSK ரசிகர்களுக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக, சென்னை #CSK அணியில் உள்ள முன்னணி பவுலர்களாக இருக்கும் இங்கிலாந்து பவுலர் கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே ஆகிய இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜோர்டனுக்கு தொண்டைப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே, அவர் 2 வது போட்டியில் விளையாட வில்லை என்றும், அவர் தற்போது 6 நாள் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதே போல், ஆடம் மில்னேவும் காயம் காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதால், அவரும் அடுத்தடுத்து போட்டிகளில் களம் இறங்குவது சந்தேகம் ஆகி உள்ளது.
இப்படியாக, திறமையான வீரர்கள் இருந்தும் அவர்களது காயம் மற்றும் உடல் நிலையை கருத்தில்கொண்டு, அவர்கள் களம் இறங்காமல் இருப்பதால் அடுத்தடுத்த போட்டிகளில் #CSK என்ன செய்வதென்றே தெரியாமல் சென்னை அணியானது சற்று தடுமாறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.