IPL2022: தூள் கிளப்பிய ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி! சரணடைந்த மும்பை இந்தியன்ஸ்!
#IPL2022 மும்பை இந்தியன்ஸ் #MI அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் #RR அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று உள்ளது.
#IPL2022 கிரிக்கெட் தொடரின் 15 வது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் 9 வது லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில், #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் - #MI மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியி, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்களா ஜோஸ் பட்லர் - யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
ஆனால், ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடிய நிலையில், மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் கூடவே இருங்கிய நிலையில், அவர் ஒரு ரன்கள் எடுத்திருந்தபோது, பும்ராவின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி, அவுட்டானார்.
2.4 ஓவரில், #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் விக்கெட் பறிபோனாலும், மறுமுனையில் நின்ற ஜோஸ் பட்லர் #MI மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை வெளுத்துவாங்கிக்கொண்டு இருந்தார்.
அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் வெறும் 7 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பட்லருடன் இணைந்து நிதானமான விளையாடினார்.
அப்போது, #RR கேப்டன் சஞ்சு சாம்சன் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த ஹெட்மயரும் சற்று அதிரடியாகவே #MI பந்து வீச்சை நொறுக்கித் தள்ளிய நிலையில், 14 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து அவுட்டானர். பின்னர், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டான நிலையில், மறுமுனையில் நிலைத்து நின்றி வாணவேடிக்கை காட்டிக்கொண்டிருந்த ஜோஸ் பட்லர், அதிரடியாக சதமடித்து, #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரே அடியாக உயர்த்தினார்.
இப்படியாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 193 ரன்கள் எடுத்து அசத்தியது.
பின்னர், 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, #MI மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.
பின்னர் வந்த அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா, இஷான் கிஷானுடன் சேர்ந்து #MI அணியை சரிவில் இருந்து சற்றே மீட்டார்.
என்றாலும், இஷான் கிஷான் 54 ரன்களிலும், திலக் வர்மா 61 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, டிம் டேவின் 1 ரன்களிலும், டேனியல் சேம்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
அப்போது, கடைசி நேரத்தில் களமிறங்கிய இறுதி வரை போராடிய பொல்லார்டு 22 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் என்றாலும், 20 ஓவர்கள் முடிவில் #MI மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. ராஜஸ்தான் அணியில் அதிக பட்சமாக பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
குறிப்பாக, 2 வது போட்டியிலாவது வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய மும்பை அணிக்கு, இது 2 வது தோல்வியாகும். அதே போல், ராஜஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் ஐதராபாத்தை அணியை 61 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்த நிலையில், தற்போது மும்பையை வீழ்த்தி 2 வது வெற்றியை எளிதாக பதிவு செய்து உள்ளது.
இதனிடையே, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு உள்ளது. அதன் படி, குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.