தோனியாக மாறும் ரிஷப் பண்ட்! விராட் கோலியாக மாறும் சஞ்சு சாம்சன்! சம பலத்தோடு இன்று மோதும் ராஜஸ்தான் - டெல்லி யின் பலம்? பலவீனம்??
By Aruvi | Galatta | Apr 15, 2021, 04:50 pm
தோனியாக ரிஷப் பண்ட்டும், விராட் கோலியாக சஞ்சு சாம்சனும் சம பலத்தோடு இருப்பதால், இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் திருவிழாவின் இன்றைய லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்ஷன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியானது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதற்கு காரணம், டெல்லி அணியானது முதல் போட்டியில் சென்னையை வீழ்த்திய உற்சாகத்தோடு, 2 வது போட்டியில் களம் இறங்குகிறது. டெல்லி அணியை பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா - தவன் ஆகிய இருவரும் அசுர பலத்தோடு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும், முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து அசத்தியதோடு நல்ல ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
அத்துடன், டெல்லியின் அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கும் கேப்டன் ரிஷப் பந்த், ஸ்டாய்னிஸ், ஹெட்மயர், ரஹானே ஆகியோர் பேட்டிங்கில் நல்லா ஃபார்மில் உள்ளனர். இவர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடு சிறப்பாக செயல்படும் பட்சத்தில், டெல்லி அணியின் ஸ்கோர் எகிர அதிக வாய்ப்பு உள்ளது.
அதே போல், வேக பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், அவேஷ் கான் முதல் போட்டியிலேயே நம்பிக்கை தந்து விட்டனர். ஸ்டாய்னிஸ், மற்றும் டாம் கரண் ஆகியோர் அந்த அணிக்கு பந்து வீச்சில் பக்க பலமாக உள்ளனர். இது, அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.
மேலும், ஸ்பின் பவுலிங்கில் அஸ்வின் மற்றும் மிஸ்ரா எழுச்சியோடு இருப்பதால், அந்த அணிக்கு இன்னும் கூடுதல் பலமாகவே இருக்கிறது.
அதே போல், ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில், பென் ஸ்டோக்ஸ் தற்போது விலகி உள்ளது அந்த அணிக்கு மிகப் பெரும் பின்னடைவாகவே அமைந்து உள்ளது.
அதேபோல, அந்த அணியில் ஆர்ச்சரும் இல்லாதது அந்த அணியை இன்னும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
குறிப்பாக, அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைப் போல் இணையாக ஒப்பிட்டு பேசப்பட்டு வரும் நிலையில், அவரது பேட்டங்க மட்டும் மிகப் பெரிய பலமாகவே இருக்கிறது. அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்களான பட்லர், வோரா, பராக் ஆகியோர் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணியில் உள்ளதும் கவனிக்கப்பட வேண்டி உள்ளது.
முக்கியமாக, அந்த அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர் ராகுல் திவாட்டியா, இன்றைய போட்டியலும் எதிரணியை மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ராஜஸ்தான் அணியில் பந்துவீச்சில் சக்காரியா, கிறிஸ் மோரிஸ் ஆகியோர் நம்பிக்கை அளித்து வருகின்றனர். இவர்களுடன் துபே, முஸ்தபிகூர் ரஹ்மான் ஆகியோர் கைகொடுக்கும் பட்சத்தில் ரன் வேட்டை இன்னும் கட்டுப்படுத்தப்படும்.
இப்படியாக, இளம் கேப்டன்களை வைத்திருக்கும் இரு அணிகளும், சம பலத்துடன் இருப்பதால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு அணிகளும், இது வரை 22 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில், டெல்லி அணி 11 வெற்றிகளையும், ராஜஸ்தான் அணி 11 வெற்றிகளையும் பெற்று சமபலத்துடன் உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குத் துளியும் பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உண்மை.