வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1000 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வென்றி பெற்ற நிலையில், கேப்டன் பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ரோகித்தின் இளம் படை வெற்றி கொடியை உயரப் பிடித்துள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியானது, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்த போட்டி, இந்தியாவிற்கு ஆயிரமாவது ஒருநாள் போட்டி என்பதால், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

அத்துடன், இந்த ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா, கேப்டனாக தலைமை ஏற்கும் முதல் போட்டி என்பதாலும், அதிகம் எதிர்பார்ப்பு எழுந்தது.

மேலும், இதுவரை கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த விராத் கோலி, தற்போது கேப்டன் பொறுப்பு இல்லாமல் விளையாடும் முதல் ஒரு நாள் போட்டி இது என்பதாலும், இந்த போட்டியானது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதே நேரத்தில் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா அறிமுகமானார். 

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப், பிராண்டன் கிங் ஆகிய இருவரும் ஓபனிங் இறங்கி இன்னிங்சை தொடங்கினர்.

ஹோப் 8 ரன் மட்டுமே எடுத்து சிராஜ் வேகத்தில் கிளீன் போல்டானார். கிங் 13 ரன், டேரன் பிராவோ 18 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டை இழுந்து தவித்தனர். 

அப்போது, ஓரளவுக்கு தாக்குப் பிடித்த நிகோலஸ் பூரன் 18 ரன் எடுத்து சாஹல் சுழலில் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து வந்த கேப்டன் போலார்டும், முதல் பந்திலேயே ஸ்டம்புகள் சிதற டக் அவுட்டாகி வெளியேறினார். 

இதனால், அப்போதே வெஸ்ட் இண்டீஸ் அணியானது, இந்திய அணியிடம் ஏரக்குறைய சரணடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவும் இந்த புள்ளியில் இருந்து தொடங்கியதே என்றே கூறலாம்.

அடுத்த வந்த அக்கீல் ஹொசைனும், டக் அவுட்டாகி வெளியேறி முதல் 79 ரன்களுக்கு அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து தட்டு தடுமாறி திணறிக்கொண்டிருந்தது.

பின்னர் வந்த ஜேசன் ஹோல்டர் மட்டும், சிறிது நேரம் தாக்குப்பிடித்து சில சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இதனால், 43.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது, ஆல்-அவுட்டாகி 176 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 

குறிப்பாக, சஹல் 4 விக்கெட்டுகள், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் என்று, வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்களது சுழலிலேயே இருவரும் சுருட்டி வாரிப்போட்டர். 

இந்த போட்டியில், சாஹல் வீசிய முதல் ஓவரில் நிக்கோலஸ் பூரான் ஆடட்டமிழந்தார். இது சாஹலின் சர்வதேச ஒருநாள் போட்டியின் 100 வது விக்கெட் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இதனையடுத்து, 2 வது இன்னிங்ஸில் ரோஹித் மற்றும் இஷான் கிஷன் தங்களது இன்னிங்ஸ்சை ஆடத் தொடங்கினார்

அதன்படி, 51 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ரோஹித் அவுட் ஆனார். அப்போது, இந்தியாவின் ஸ்கோர் 84 ஆக இருந்தது. அடுத்து வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி, 8 ரன்களில் ஆட்டமிழந்திருந்த போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அதே ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் வந்த ரிஷப் பண்ட் 11 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆக, அடுத்து வந்து ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் தீபக் ஹூடா மற்றும் சூர்யகுமார் யாதவ் மிகவும் பொறுப்புடனும், அதிரயாகவும் விளையாடி வெறும் 28 ஓவரில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இந்திய
இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 

அதன் படி, அறிமுக வீரர் ஹூடா 26 ரன்களும், சூரியகுமார் யாதவ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

முக்கியமாக, இந்த வெற்றியின் மூலம், 1000 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியானது கொடி ஏற்றியதுடன், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலைவ பெற்று உள்ளது. இந்த போட்டியில், சஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிட்டதக்கது.