குஜராத் ரசாயன தொழிற்சாலை விபத்து.. நிவாரணம் வழங்க மோடி அறிவிப்பு!

குஜராத் ரசாயன தொழிற்சாலை விபத்து.. நிவாரணம் வழங்க மோடி அறிவிப்பு! - Daily news

குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு  பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரித்துள்ளார். மேலும் அத்துடன் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

குஜராத் மாநிலம் பருச் பகுதியில்  இயற்கை ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில்  இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தொழிற்சாலையில்  இருந்த ரசாயன உலை திடீரென வெடித்து சிதறியது. இதனையடுத்து  தொழுற்சாலையில் தீ பற்றி எரிந்தது இந்த விபத்தில் சிக்கி  ஆலையில் பணியாற்றி வந்த 6 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

அதனைத்தொடர்ந்து விபத்து தொடர்பாக தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர்  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் உயிரிழந்தவர்களின்  குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா  2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாய்  வீதம் நிவாரணம்  வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.  
 

Leave a Comment