“இந்தியாவில் கட்டாய பாலியல் உறவுக்கு இந்திய மனைவிகள், நோ சொல்வதாக” தற்போது நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
இந்தியாவில் குடும்ப சூழல் மற்றும் பெண்களின் மன நிலை தொடர்பாக குறிப்பிட்ட கால இடைவேளையில் ஆய்வுகள் நடப்பதுண்டு.
அந்த வகையில், தற்போது தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கை ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில், பல்வேறு தகவல்கள் அடங்கிய விபரங்கள் ஆய்வறிக்கையின் முடிவாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது, இந்தியாவில் தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கையை விவரங்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த வாரம் வெளியிட்டு இருந்தார்.
அதில், பல்வேறு முக்கிய தகவல்கள் பதிவாகி இருக்கின்றன.
அதன்படி, “ஆண் - பெண் பாலியல் சுதந்திரம் மற்றும் சமத்துவம் சார்ந்த கேள்விகளும்” அதில் இடம் பெற்று உள்ளன.
இதில், “கணவர் பாலியல் உறவுக்கு அழைக்கும் போது, மனைவி மறுப்பு தெரிவிக்க சுதந்திரம் உள்ளதா? என்ற கேள்விக்கு, 82 சதவீதம் இந்திய மனைவிகள், 'ஆம்' சுதந்திரம் உள்ளது” என்று, பதில் அளித்து உள்ளனர்.
குறிப்பாக, “இதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டின் கோவாவைச் சேர்ந்த பெண்கள் 92 சதவீதம் 'ஆம்' என்றும், குறைந்த பட்சமாக 'அருணாசல பிரதேச பெண்கள்' 63 சதவீதம் பேர் 'ஆம்' என்றும் பதில் அளித்து உள்ளனர்.
அத்துடுன், “இந்தியாவில் திருமணம் ஆனவர்களை தங்கள் இணையிடம் பாலியல் வன்கொடுமை Marital Rape புரிந்தால், அது குற்றமல்ல என்ற பிரிவில் விதிவிலக்கு” உள்ளது.
இதன் காரணமாக, கணவர் கட்டாய பாலியல் வன்புணர்வு செய்யும் போது, மனைவி அதை எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்து வந்த நிலையில் தான், அண்மை காலமாக இந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அதே போல், “இந்தியாவில், பெண்கள் பாலியல் உறவுக்கு மறுக்கும் போது, அதற்கு ஆண் கோபத்தை வெளிப்படுத்துவது, அந்த பெண்ணுக்கு பொருளாதார உதவி வழங்க மறுப்பது, அவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது அல்லது வேறு பெண்ணிடம் முறையற்ற பாலியல் உறவு வைத்துக்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால், அதை நீங்கள் ஏற்பீர்களா?” என்று, மனைவியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இந்த சர்ச்சைக்குறிய கேள்விக்கு “இந்த 4 கேள்வியில் எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று, 72 சதவீத இந்திய பெண்கள் பதில் அளித்து உள்ளனர்.
குறிப்பாக, “15 வயது முதல் 49 வயது வரை உள்ள திருமணம் ஆன பெண்களில் 32 சதவீத பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கின்றனர் என்றும், இதே வயதில் திருமணமான ஆண்களில் 98 சதவீதம் பேர் வேலைக்கு செல்கின்றனர் என்றும், வருவாய் ஈட்டும் பெண்களில் 85 சதவீதத்தினர் தங்கள் வருவாயை தங்கள் முடிவுக்கு ஏற்ப செலவு செய்யும் சுதந்திரம் 18 சதவீத பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது” என்றும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக, “திருமணம் ஆன 42 சதவீத பெண்கள் சந்தைகள், மருத்துவமனைகள் அல்லது வேறு பொது வெளிக்கு தனியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை” என்றும், அந்த ஆய்வுகளில் கூறப்பட்டு உள்ளது.