ஊர் மக்களே பூரித்து போகும் அளவுக்கு அனாதை குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுக்கு மத்தியில் “ராஜா - அனுசுயா” தம்பதியினர் திருமணம் செய்துகொண்ட வைபோகம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
ஊரே அசந்து போகும் அளவுக்கு நடைபெற்ற இந்த வித்தியாசமான திருமணமானது, தருமபுரி மாவட்டத்தில் தான் நடந்திருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த இந்த இளைஞர் ராஜாவுக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த அனுசுயாவுக்கும் இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தை தனது மனதிற்கு பிடித்தார்போல் நடத்த முடிவு செய்த மாப்பிள்ளை ராஜா, தனது உறவினர்களை விட, அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள், மூதியவர்கள், பெரியவர்கள், காதுகேளாத குழந்தைகள், மாற்று திறனாளிகள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த நலிவடைந்த தெருக்கூத்து கலைஞர்கள் என்று அனைவரையும் அழைத்து தனது திருமணத்தை நடத்த அந்த மாப்பிள்ளை முடிவு செய்திருக்கிறார்.
இது குறித்து மணமகள் அனுசுயாவிடம் அனுமதி கேட்டிருக்கிறார். அவரும் இதனை கேட்டு பூரித்துப்போய் ஓகே சொல்ல, தான் திட்டமிட்டபடியே, ஆதரவற்ற குழந்தைகள், மூதியவர்கள், பெரியவர்கள் என்று அந்த பகுதியில் உள்ள பெரும்பாலனவர்களை அழைத்து, ஊரே பூரித்துப் போகும் அளவுக்கு தனது திருமணத்தை நடத்தியிருக்கிறார்.
அதன்படி, ஆதரவற்ற அனைவரையும் சில வேன்களை ஏற்பாடு செய்து, அவர்களை திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்து, அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கு புதிய ஆடைகள் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.
அத்துடன், ஆதரவற்ற அவர்கள் அனைவருடனும் சேர்ந்து அவர்களது ஆசியின் படியே, மாப்பிள்ளை ராஜா - மணமகள் அனுசுயாவின் கழுத்தில் தாலி கட்டி உள்ளார்.
அத்துடன், இந்த புதுமணத்தம்பதிகள் ஆதரவற்ற அனைவருடனும் சேர்ந்து போட்டோவும் எடுத்துக்கொண்டனர். இதனைக் கண்ட அந்த திருமண விழாவிற்கு வருகை தந்த இருவீட்டார் உறவினர்கள் மற்றும் அப்பகுதி ஊர் மக்கள். “ஆதரவற்றவர்களை அழைத்து அவர்கள் முன்பு மிகவும் வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்தியதைக் கண்டு, அப்படியே அசந்துபோய் உள்ளனர்.
மிக முக்கியதாக, இந்த திருமணத்தில் கலந்துகொண்ட சந்தனகடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி, அப்படியே நெக்குறுகி ஆச்சயரிப்பட்ட நிலையில், மணமக்கள் இருவரையும் வாழ்த்தினார்.
இந்த திருமணம் தொடர்பாக மாப்பிள்ளை ராஜா பேசும் போது, “ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதவரற்ற முதியவர்கள் ஆசிரமங்களிலியே உணவளித்து வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இதனால், அவர்களும் இது போன்ற சுப விழாக்களுக்கு அழைத்தது உணவளிப்பதால், அவர்கள் சுதந்திரமாக இருப்பார்கள்” என்றும், கூறினார்.
இதனால், இந்த திருமண விழாவைப் பற்றிய செய்திகள், அந்த மாவட்டம் முழுவதும் பரவிய நிலையில், அனைவரும் அப்படியே பூரித்துப்போய் உள்ளனர். இதனால், இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.