மச்சக்கார இளைஞன் ஒருவன், ஒரே நேரத்தில் 3 சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
80s, 90s கிட்ஸின் தமிழக இளைஞர்கள் பலருக்கும் இன்னும் கல்யாணம் ஆகாமல், பெண் கிடைக்காமல் இன்னும் சிங்கிளாகவே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தை தாண்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் வெளிநாட்டிலும் சில மச்சக்கார இளைஞர்கள் ஒரே நேரத்தில் 2, 3 இளம் பெண்களை திருமணம் செய்து அசத்தி வருவது, 80s, 90s கிட்ஸின் தமிழக இளைஞர்களை உசுப்பேத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
இப்படி, 90's கிட்ஸ் இளைஞர்கள் எல்லாம் பொறாமை பட்டு நோகும் படியான ஒரு கல்யாணம், காங்கோ நாட்டில் தற்போது நடந்திருக்கிறது.
அதாவது, காங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தெற்கு கிவுவை சேர்ந்த லுவிசோ என்ற இளைஞர், ஒரே நேரத்தில் 3 சகோதரிகளை திருமணம் செய்து அசத்தி உள்ளார்.
அந்நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி இருக்கிறது.
அதுவும், ருவாண்டாவின் எல்லைக்கு அருகில் உள்ள காங்கோ நாட்டின் தெற்கு கிவுவில் அமைந்து உள்ள கலேஹேவில் தான், இந்த ஆச்சரிய திருமணம் நடந்து உள்ளது.
அந்த பகுதியில் லுவிசோ நடாஷா, நடாலி, நடேஜ் ஆகிய 3 சகோதரிகள் வசித்து வந்தனர்.
இந்த 3 சகோதரிகளும், தங்களுக்குள் பேசி ஒரு இளைஞனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று, முடிவு செய்திருந்தாக கூறப்படுகிறது.
அதன் படி, இந்த 3 சகோதரிகளும், அங்குள்ள தெற்கு கிவுவை சேர்ந்தவர் லுவிசோ என்னும் இளைஞனைப் பார்த்து, “நீங்கள் எங்கள் 3 பேரையும் திருமணம் செய்துகொள்கிறாயா?” என்று கேட்டு உள்ளனர்.
இதனால், இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய லுவிசோ, “3 லட்டு திங்க கசுக்குமா?” என்பது போல், அந்த சகோதரிகள் கூறியதை மகிழ்ச்சியுடன் உடனே ஏற்றுக்கொண்டு உள்ளார்.
ஆனால், இந்த “3 சகோதரிகளை திருமணம் செய்துகொள்ளும் அவரது முடிவை” அவரது பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால், அவர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், அவரது பெற்றோர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றபோதிலும், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, ருவாண்டாவின் எல்லையின் அருகிலுள்ள தெற்கு கிவுவில் அமைந்துள்ள கலேஹேவில் இவர்களுக்கு முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்த திருமணத்திற்குப் பிறகு, தங்களது திருமணம் பற்றிய பேசிய மாப்பிள்ளை லூசோ, “நான் கனவு கண்டது போல் தெரிகிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
“நான் முதலில் நடாலியை காதலித்தேன். ஆனால், அதன் பிறகு தான் அவரது 2 சகோதரிகளை நான் சந்திக்க நேர்ந்தது என்றும், அப்போது அவர்களுக்குள் பேசிக்கொண்ட சகோதரிகள், அவர்களது விருப்பத்தை என்னிடம் தெரிவித்த போது, நானும் அவர்கள் 3 பேரையும் திருமணம் செய்ய சம்மதித்தேன்” என்றும், விளக்கம் அளித்து உள்ளார்.
அதே நேரத்தில், “இது எளிதான முடிவு இல்லை என்றாலும், நான் என்ன செய்கிறேன் என்று என் பெற்றோருக்கு இது வரை புரியவில்லை” என்றும், அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, “கூடுதலாக நாம் எதாவது ஒன்றைப் பெற, எதையாவது ஒன்றை இழக்க வேண்டும்” என்று, தத்துவம் பேசி உள்ள அவர், “ ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பங்கள் மற்றும் விஷயங்களைச் செய்வதற்கான அவரவர் தனி வழி உள்ளது” என்கிற தத்துவத்தையும் கூறி உள்ளார்.
மேலும், “மற்றவர்கள் என்ன நினைத்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்றும், 3 சகோதரிகளை திருமணம் செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.
“என் பெற்றோர் என் முடிவை வெறுத்தார்கள் என்பதால் தான், அவர்கள் என் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் எங்கள் காதலுக்கு எல்லை இல்லை என்பதை என்னால் எப்போதும் சொல்ல முடியும்” என்றும், தனது காதல் திருமணத்திற்கு அவர் புதிய விளக்கம் அளித்தார்.