IPL2022: கடைசி ஓவரில் பிரமிப்பு காட்டி தோனி மேஜிக்..! மும்பைக்கு எதிராக சென்னை திக்.. திக். திரில் வெற்றி!
#IPL2022 நேற்றைய லீக் போட்டியில் #MI மும்பைக்கு எதிராக ஃபினிஷிங்கில் பிரம்ப்பு காட்டிய தோனி, கடைசி ஓவரில் பிரமிப்பு காட்டி திக்.. திக். திரில் வெற்றி பெற்றது #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
#IPL2022 சீசினன் 33 வது லீக் ஆட்டத்தில் #MI மும்பை அணியும் - #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதின. இதில், டாஸ் வென்ற #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன் படி, #MI மும்பை அணியின் ஓபனர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி களமிறங்கினர். அப்போது, முதல் ஓவரை வீசிய #CSK வீரர் முகேஷ் சவுத்ரி, அனல் பறக்க வீசிய 2 வது பந்திலேயே, ரோகித் சர்மாவை டக் அவுட்டாகி வெளியேற்றினார். தொடர்ந்து அந்த முதல் ஓவரின் 5 வது பந்தில் இஷான் கிஷன் போல்டானார். இதனால், முதல் ஓவரிலே மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட்டாகி வெளியேறினர். இதனால், #CSK ரசிகர்கள இன்ப அதிர்ச்சியில் திழைத்தனர்.
அதே போன்று, முகேஷ் சௌத்ரி வீசிய 2 வது ஓவரில் #MI வீரர் பிரவீஸ், தோனியிடம் கேட்ச் ஆகி அவுட்டானார். இதனால், #MI மும்பை அணி 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தவித்தது.
பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதனால், பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 42 ரன்கள் சேர்ந்தது. என்றாலும், சாண்ட்னர் பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களில் வெளியேறி நடையை கட்டினார்.
இதனால், #MI அணியானது 13 வது ஓவர் வரை 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. மறு முனையில் தொடர்ந்து விளையாடிய திலக் வர்மா, அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கிய நிலையில், தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர், உத்தப்பா உடன் ஜோடி சேர்ந்த சான்ட்னர் 11 ரன்களில் வெளியேற, மறுமுனையில் அற்புதமாக விளையாடி வந்த உத்தப்பா 30 ரன்களில் உனட்கட் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர், ராயுடு வந்து சிறது அதிரடி காட்ட அவர் அதிகபட்சமாக 40 ரன்களில் வெளியேறினார்.
இதனால், #CSK சென்னை அணிக்கு இது வாழ்வா? - சாவா? என்ற நிலை ஏற்பட்டது. அப்போது, இந்த ஆட்டத்தின் பரபரப்பான சூழலில் களமிறங்கிய #CSK கேப்டன் ஜடேஜா, 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, அதன் பிறகு களமிறங்கிய தோனி - பிரிட்டோரியஸ் ஜோடி, சற்று நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர்.
இதனால், #CSK வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்படபோது, முதல் பந்தில் பிரிட்டோரியஸ் உனட்கட் பந்துவீச்சில் எல்பிடபில்யூ ஆகி அதிர்ச்சி அளித்தனர்.
பின்னர் வந்த பிராவோ ஒரு ரன் எடுக்க, 3 வது பந்தை தோனி எதிர்கொண்ட நிலையில். சிக்சருக்கு பறக்கவிட்டார். இதனால், 4 வது பந்தில் பவுண்டரிக்கு பறக்க, 5 வது பந்தில் 2 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், கடைசி பந்தில், #CSK வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இதனால், இந்த போட்டியில் கடைசி நேரத்தில் திக்.. திக்.. நிமிடங்கள் தொற்றிக்கொண்டது.
இப்படியாக, கடைசி ஓவரில் பிரம்ப்பு காட்டிய தோனி, கடைசி பந்தில் பொறுமையாகவும், நிதானமாகவும் விளையாடிய தோனி, மேஜிக் காட்டி அழகாக பவுண்டரிக்கு பறக்கவிட்டு, #CSK வெற்றி பெற உறுதுணையாக அமைந்தார். இதன் மூலமாக, #CSK அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில், மும்பை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தோனியின் இந்த ஃபினிஷிங்கும், மும்பைக்கு எதிரான வெற்றியும், இந்த சீசனில் சென்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து ப்ளே ஆஃப் போக வைக்குமா என்கிற எதிர்பார்ப்பையும் மேஜிக் காட்டி தோனியால், #CSK ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.
இதனையடுத்து, “தோனி என்றுமே பெஸ்ட் ஃபினிஷர்! ஒன்மேன் ஆர்மி!” என்று, அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். ரகிர்களைப் போல, ஜடேஜாவும் ஒரு ரசிகராகவே மாறி, போட்டி முடிந்த நேராக உள்ளே களத்திற்கு ஓடி வந்த ஜடேஜா, தோனியின் முன் குணிந்தபடி, “நீங்கள் தான் ஜாம்பவான், நீங்கள் தான் கேப்டன்” என்பது போன்று, மரியாதை செலுத்தினார்.
#CSK அணியின் கேப்டனாக இல்லாமல், ஒரு ரசிகராகவே மாறி தோனியிடம் ஜடேஜா மரியாதை கொடுத்த நிகழ்வானது, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.