பிறந்து 5 மாதம் ஆன ஆண் குழந்தை ஒன்று, தனது தாயை பார்த்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 5 மாத குழந்தைதான் தாயுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்து அசத்தி உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் மிச்சேலே என்ற பெண், தனது கணவன் மற்றும் 5 மாத கை குழந்தை உடன் வசித்து வருகிறார்.
அதே நேரத்தில், மிச்சேலே அப்பகுதியில் “உடலை சீராக வைத்து கொள்வதற்கான பயிற்சி அளிக்கும்” நபராக செயல்பட்டு வருகிறார்.
இந்த சூழலில் தான், மிச்சேலேக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தை தற்போது 5 மாத குழந்தையாக வளர்ந்து தவள ஆரம்பித்து உள்ளது.
அதே நேரத்தில், அந்த குட்டி குழந்தையானது, வழக்கம்போல் சுட்டி குழந்தையாகவே அதிகம் சேட்டைகளையும் செய்தும் வருகிறது அந்த குழந்தை.
இந்த சூழலில் தான், குழந்தைக்கு தாயாக மாறிய நிலையிலும் கூட மிச்சேலே, தனது உடற்பயிற்சி மேற்கொள்ளுவதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.
இதனை தினமும் கவனித்துக்கொண்டு வந்த அந்த 5 மாத கை குழந்தையும், தனது தாயார் செய்வதைப் போலவே, தனது தயாருடன் சேர்ந்து அந்த குழந்தையும் உடற்பயிற்சி செய்கிறது.
இது தொடர்பாக அந்த குழந்தை உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தாய் மிச்சேல், தனது முன்னங்கைகளை தரையில் வைத்த படி, பிளாங் எனப்படும் உடற்பயிற்சியை செய்கிறார்.
இதனைப் பார்த்த, அந்த 5 மாத கை குழந்தையும், குப்புற படுத்திருந்தபடி, தாயார் மிச்சேலேவைப் பார்த்து தனது உடலை மேலே எழுப்ப முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்று அந்த உடற்பயிற்சியையும் செய்து அசத்துகிறது.
இப்படியாக, அந்த 5 மாத குழந்தை ஒரு சில வினாடிகள் உடற்பயிற்சி செய்வது தொடர்பான அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது.
அதாவது, அந்த பிஞ்சி பச்சிளம் குழந்தையானது, தனது இந்த வயதிலேயே தாயாரைப் பார்த்தே கற்றுக்கொண்டு, தாயாப் போன்றே அதே மாதிரியான உடற்பயிற்சியை தானகவே செய்கிறது.
இப்படியாக, ஆச்சரியத்தைப் ஏற்படுத்தம் விதமாக, அதுவும் ஒரு தேர்ந்த பயிற்சி பெற்றவரைப் போல அந்த குழந்தை செயல்படுவது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியிலும் புதிய பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.
குறிப்பாக, இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிச்சேல் தற்போது பதிவிட்டு உள்ள நிலையில், இது பெரும் வைரலாகி வருகிறது.
முக்கியமாக, அந்த 5 மாத குழந்தையின் உடற்பயிற்சி வீடியோவை இதுவரை 3.1 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளது குறிப்பிடத்தக்து.