2021 ஐபிஎல்.. “பிளேஆப் வாய்ப்பு யாருக்கு?” ஒரு இடத்திற்கு 4 அணிகள் கடும் போட்டி
2021 ஐபிஎல் போட்டியில் பிளே ஆப் வாய்ப்பு யாருக்கு என்பதில் ஒரு இடத்திற்கு மொத்தம் 4 அணிகள் இடையே கடும் போட்டிகள் நிலவி வருகின்றன.
2021 ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் தற்போது முக்கியமான ஒரு கட்டத்தை எட்டி உள்ளன. அதாவது, இந்த ஐபிஎல் லீக்கில் களத்தில் உள்ள எல்லா அணிகளும் தற்போது வரை தலா 11 போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மட்டும் இது வரை 12 போட்டிகளை விளையாடி உள்ளன.
தற்போது, டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது 12 போட்டியில் மோதி வருகின்றன.
குறிப்பாக, இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி அணிகள் தகுதி பெற்றுவிட்டன.
இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 7 வெற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தில் உள்ளது.
அத்துடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்னும் 3 போட்டிகள் இருக்கிறது. இதில், ஒன்றில் வெற்றிபெற்றால் கூட 3 வது அணியாக ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று 4 வது இடத்தில் உள்ளன. ஆனாலும், அந்த அணிக்கு பல தடைகள் முன்னாள் நின்கின்றன.
அதாவது, 4 வது அணியாக பிளேஆப் சுற்றுக்குள் நுழைய கொல்கத்தா, பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அதன் படி, கொல்கத்தா 12 போட்டியில் 5 ல் வெற்றியுடன் 4 வது இடத்தில் இருக்கிறது.
இதில், ஐதராபாத் அணியானது, 7 ஆம் தேதி ராஜஸ்தானுடன் மோத இருக்கிறது. இந்த 2 போட்டியிலும் கொல்கத்தா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
அதே போல், பஞ்சாப் அணி இது வரை 5 ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழலில், நாளை பெங்களூரு அணியுடனும், 7 ஆம் தேதி சென்னை அணியுடனும் இந்த அணி மோதி விளையாடுகிறது. இப்படியாக, இந்த 2 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே ரன்ரேட் அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கும் என்றும், கூறப்படுகிறது.
இதேபோல் மும்பை 11 போட்டியில் விளையாடி 5 ல் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. இதன் காரணமாக, தற்போது டெல்லியுடன் விளையாடும் இன்றைய போட்டியிலும், 5 ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடனும், 8 ஆம் தேதி ஐதராபாத் அணியுடனும் மோத இருக்கிறது.
மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 11 போட்டிகளில் விளையாடி 4 ல் வெற்றி பெற்று உள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் சென்னையை வீழ்த்தினால் தான், அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகும் சூழல் உருவாகி உள்ளது.
இதனால், இந்த ஐபிஎல் தொடரானது தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
இனி வரும் போட்டிகள் அனைத்தும், ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், 4 வது இடத்திற்கு 4 அணிகள் போட்டி போட்டு வரிசையாக வென்றாலும், அதிலும் ரன் ரேட்டில் இனி முக்கிய கவனம் செலுத்த வேண்டிய சூழல், இந்த 4 அணிகளுக்கும் உருவாகி உள்ளது.
இதனால், ஐபிஎல் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.