திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் அரியணையில் அமர்த்துவதும், திமுக ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்வதே இலக்கு. எனவே தான் இப்போது எம்.எல்.ஏ ஆவது முக்கியமில்லை என்று  உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். 

உதயநிதி எடுத்துள்ள இந்த முடிவு குறித்து, தான் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என நினைப்பதாக மு.க.ஸ்டாலிடம் உதயநிதி தெரிவித்துள்ளார். தனது தந்தை மு.க.ஸ்டாலினை போல் இன்னும் கட்சி பணி செய்து படிப்படியாக வளர விரும்புவதாகவும், கட்சிக்காக உழைத்த சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அங்கீகரிக்க வேண்டும் என பேசியுள்ளார். அதேபோல் தான் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவு குறித்து, இளைஞர் அணியின் முக்கிய நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசித்துள்ளார். 

udhayanidhi

ஸ்டாலினிடம், ‘உங்களை முதல்வராக்கி திமுக ஆட்சியை பிடிக்க, தான் எந்த தியாகத்தையும் செய்ய தயார்’ என்றுள்ளார். 


சேப்பாக்கம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் இளைஞரணி சார்பில் தமிழகம் எங்கும் தேர்தல் பிரசாரம் செய்வது உள்ளிட்ட கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட  முடிவெடுத்துள்ளார். 


''ஸ்டாலினும், உதயநிதியை போட்டியிட சொல்லி வலியுறுத்தினாலும் தனது முடிவில் உதயநிதி உறுதியாக இருந்துள்ளார். மேலும் ’’தொண்டனாக இளைஞர் அணியின் செயலாளராக இருக்கவே விரும்புகிறேன். தேர்தல், பதவி, அங்கீகாரம் எதுவும் எனக்கு இப்போது வேண்டாம்'' என உதயநிதி தெரிவித்துள்ளார். உதயநிதியின் இந்த முடிவு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.