தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கப்படும்

தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அரசு நடவடிக்கை  எடுக்கப்படும் - Daily news

தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அரசு நடவடிக்கை  எடுக்கப்படும் 


ஆம்னி பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

20371 பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பாக தயார் நிலையில் உள்ளது

- போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் சேவை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பேருந்தின் உள்ளே ஏறி பயண ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்த அமைச்சர் ராஜகண்ணப்பன், உதவி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் :-

பொதுமக்களை தீபாவளி பண்டிகைக்கு பாதுகாப்புடன் அவர்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று திரும்பி கொண்டு வந்து சேர்ப்பதற்காக 20371 பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பாக தயார் நிலையில் இருக்கிறது என்றார்

rajakanappan

16540 பேருந்துகளும் முதற்கட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அனுப்பப்படுகிறது என்றும் 17719 பேருந்துகள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ராமு டிராவல்ஸ் நிறுவனத்திடம் 5 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் 12 மண்டல இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்

18004256151 என்ற Toll free  எண்ணிற்கு பொதுமக்கள் ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் தொடர்பாக புகார் அளிக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகள் பெறப்பட்டால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

170718 பேர் இதுவரை சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதில் 105051 பேர் முன் பதிவு செய்திருந்தவர்கள் என்றார்

அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிக கட்டணம் வசூலித்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பண்டிகை கால கட்டணம் என்று தனிப்பட்ட ஒன்று கிடையாது. அரசு அதுபோல் அங்கீகரிக்கவில்லை என்றார்

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு புறப்படும் பொதுமக்கள் 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக 270 இணைப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது என்றார்


 

Leave a Comment