தமிழ் நாடு வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாது மழைபெய்துவருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், சென்னை முழுவதும் வெள்ளக்காடானது.
வங்க கடல் பகுதியில் உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மற்றும் நாளை மறுநாள் சில இடங்களில் கன மழை முதல் அதிக கன மழையும் எனவும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது
வழக்கமாக அதி கன மழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக ஆய்வு மையத்தால் வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும். அந்த வகையில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ள இடங்களுக்கு ‘ரெட் அலர்ட்' எச்சரிக்கையும், மிக கன மழை பெய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கையும் விடப்படும்.
இதனை தொடர்ந்து நாளை கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுயிருக்கிறது .
இதேபோல், நாளை மறுநாள் கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்'டும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்'டும் விடுக்கப்பட்டுயிருக்கிறது .ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரையில் மழை பதிவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .