இரண்டு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி விவசாயிகளால் நடத்தப்பட்டது. பேரணியின் போது காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த வன்முறைக்கு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 


இந்நிலையில்,  கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள கல்பேட்டாவில் பேசிய ராகுல்காந்தி, “உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இந்த மூன்று வேளாண் சட்டங்களை பற்றி முழுமையான புரிதல் இல்லை. ஒருவேளை அனைத்து விவசாயிகளும் மத்திய அரசின் இந்த மூன்று வேளாண் சட்டங்களை  குறித்து முழுமையாக புரிந்துகொண்டால், முழு நாடுமே பற்றி எரியும்.” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.