மழை முடியும் வரை 3 வேளையும் அம்மா உணவகங்களில் இலவச உணவு -முதலவர் உத்தரவு.

மழை முடியும் வரை 3 வேளையும்  அம்மா உணவகங்களில் இலவச உணவு -முதலவர் உத்தரவு. - Daily news

மழை முடியும் வரை அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ammaதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவருநிலையில் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கனமழை பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. சென்னையில் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது  இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொடர்ந்து மூன்றாவது நாளாக, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன், இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து சென்னையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வீடு திரும்பும்போது, அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், கடந்த மழைகாலத்தில் 5,000 கோடி ஒதுக்கப்பட்டது என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆட்சியில் ஸ்டார்ட் சிட்டி திட்ட பணிக்காக விளம்பரம் செய்யப்பட்டு அதற்கான தொகையும் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளிலும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க, ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்களில் மழைநீர் கால்வாய்கள் சீர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . குறிப்பாக 771 கிலோ மீட்டருக்கான அளவில் ஆகாய தாமரை மற்றும் கழிவுகள் தூர்வாரப்பட்டு உள்ளதால் ஓரளவிற்கு கால்வாய்கள்  சீர் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில் 10 முதல் 15 நாட்கள் மழை நீர் தேங்கி இருந்த நிலையில் இந்த முறை உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளது.


அதை தொடர்ந்து முதலவர் கூறியதாவது : மழைக்காலம் முடியும்வரை அம்மா உணவகங்கள், மாநகராட்சி சமையல் கூடங்களில் 3 வேலையும் இலவசமாக உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனக் முதலமைச்சர் தெரிவித்தார் . வானிலை ஆய்வுமையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை மனதில் வைத்து தொடர்ந்து முதலமைச்சராகிய நானும், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுகளையும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் .  

அதனை தொடர்ந்து பேசிய முதல்வர் அவர்கள் பொய் சொல்லவே பிறந்துள்ளவர் எடப்பாடி பழனிசாமி என்றும் தேர்தல் நேரத்தில் பொய்களை கூறியயே , தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமி  கடுப்பில் தொடர்ந்து பொய்களையே பேசி வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.


 

Leave a Comment