2021 டி20 உலகக் கோப்பையில் டாப் 10 பேட்ஸ்மேன் மற்றும் டாப் 10 பவுலர்கள் லிஸ்ட் வெளியீடப்பட்டு உள்ள நிலையில், அதில் எந்த ஒரு இந்திய வீரர்கள் இடம் பிடிக்காமல் இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிர்களை சோகத்தில் ஆழத்தி உள்ளது.
2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் நேற்று இரவு மோதி விளையாடியது. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று சாதித்துக் காட்டியிருக்கிறது.
வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் தங்களது ஷூவில் குளிர்பானம் ஊற்றி குடித்த காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
அதாவது, இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் உலக கோப்பையை வெல்லலாம் என்ற புதிய உத்வேகத்துடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் அதிரடியான மற்றும் மிக சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதே நேரத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்சேல் மார்ஷ், அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, முதல் முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் தான், 2021 டி20 உலகக்கோப்பையில் டாப் 10 பேட்ஸ்மேன் மற்றும் டாப் 10 பவுலர்கள் யார் யார் இடம் பெற்றுள்ளனர் என்பது தொடர்பான லிஸ்ட்டும் தற்போது வெளியீடப்பட்டு உள்ளது.
அந்த லிஸ்டில், டாப் பவுலராக இலங்கையின் ஹசரங்கா திகழ்கிறார். ஆனால் தொடர் நாயகன் விருது வார்னருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் எடுத்த ரன்கள் 289, பாபர் ஆசம் எடுத்த ரன்கள் 301. ஜாம்ப்பா எடுத்த விக்கெட்டுகள் 13, ஹசரங்கா எடுத்த விக்கெட்டுகல் 16.
அதே போல், ட்ரெண்ட் போல்ட்டும் 13 விக்கெட்டுகளுடன் திகழ்கிறார். இதில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதுடன், கடைசி 3 போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தது. இதன் காரணமாக, டாப் 10 பேட்ஸ்மேன்கள் மற்றும் டாப் 10 பவுலர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை. இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழத்தியிருக்கிறது.
அதன்படி, டாப் 10 பேட்ஸ்மேன்கள் லிஸ்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் பாபர் ஆசம் 6 போட்டிகளில் விளையாடி 303 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதனையடுத்து 2 வது இடத்தில் டேவிட் வார்னர் 7 போட்டிகளில் விளையாடி 289 ரன்கள் சேர்த்திருக்கிறார். 3 வது இடத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் 6 போட்டிகளில் விளையாடி 281 ரன்கள் குவித்திருக்கிறார்.
அதே போல், டாப் 10 பவுலர்களில் இலங்கையைச் சேர்ந்த ஹசரங்கா 16 விக்கெட்டுக்களை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார்.
இவருக்கு அடுத்தப்படியாக, ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஆடம் ஜாம்ப்பா 13 விக்கெட்டுகளுடனும், 3 வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ட்ரெண்ட் போல்ட்டும் 13 விக்கெட்டுகளுடன் இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஜோஷ் ஹேசில்வுட் 4 ஆம் இடத்தில் 11 விக்கெட்டுகளுடனும், ஷாகிப் அல் ஹசன் 11 விக்கெட்டுகளுடன் 5 ஆம் இடத்திலும், மிட்செல் ஸ்டார்க், ஆன்ரிச் நார்ட்யே, டுவைன் பிரிடோரியஸ், ஆதில் ரஷீத், ஷதாப் கான் ஆகிய பவுலர்கள் தலா 9 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளனர்.
குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஜோஷ் ஹேசில்வுட் தான், இறுதிப் போட்டியில் சிறந்த பவுலராக செயல்பட்டார். அவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் சிறந்த பேட்ஸ்மேனை தேர்வு செய்யும் பொருட்டு தொடர் நாயகனாக வார்னரும், ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தான் தற்போது புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
அதற்கு காரணம், தொடர் நாயகன் விருதும், ஆட்ட நாயகன் விருதம் ஒரு பேட்ஸ்மேன், ஒரு பவுலருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்களும் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.