“மாணவி முன்பு துணியே இல்லாமல் நின்ற கல்லூரி சேர்மேனால், கல்லூரி மாணவி அலறித் துடித்த சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது, அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், 400 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியின் சேர்மேன் 38 வயதான தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர், பாஜக சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில், கல்லூரியின் சேர்மேன் 38 வயதான தாஸ்வின் ஜான் கிரேஸ், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் குறிப்பிட்ட அந்த வீடியோவானது, தற்போது சம்மந்தப்பட்ட அந்த கல்லூரியில் பயின்று வரும் சக மாணவிகளிடமும், அந்த கல்லூரி மாணவிகளின் பெற்றோர் மத்தியிலும் பரவி வருவதால், பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது, விடுமுறை காலம் என்பதால், சம்மந்தப்பட்ட அந்த கல்லூரி மூடப்பட்டு இருந்ததால், அந்த கல்லூரிக்கு வந்த சக மாணவிகள் பழைய பேருந்து நிலையம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளின் போராட்டம் குறித்து இது குறித்து விரைந்து வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் போலீசார் வந்து விசாரித்து உள்ளனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சக கல்லூரி மாணவிகள், “எங்களின் படிப்புக்கும், எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், கல்லூரி கட்டணத்தையும் சான்றிதழ்களையும் திருப்பித் தர வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு, மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதன் தொடர்ச்சியாக, அந்த கல்லூரியின் சேர்மேன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது புகார் அளித்த நிலையில், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அருப்புக் கோட்டை மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை, அதிரடியாக கைது செய்தனர்.
இதனையடுத்து, தாஸ்வின் பாஜகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அத்துடன், இந்த விகாரம் தொடர்பாக விரைந்து வந்த விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டி, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்தினார். இச்சம்பவம், விருதுநகர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.