அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி தனி ஆளாக உண்ணாவிரதம்! ஏன் தெரியுமா?
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்எல்ஏ வுமான கே.பி. முனுசாமி, இன்றைய தினம் திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் தற்போது வரை பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதுவும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் பல அதிரடி திருப்பங்கள் அன்றாடம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்த போது, கே.பி.முனுசாமி ஓபிஎஸ் க்கு ஆதரவாக குரல் கொடுத்து, அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அது முதல் கே.பி.முனுசாமிக்கு, அதிமுகவில் மீண்டும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
அத்துடன், ஓபிஎஸ் - ஈபிஎஸ் என பிரிந்து நின்ற இரு அணிகளும், மீண்டும் ஒன்றாக இணைந்த போதும், அதிமுகவில் கே.பி.முனுசாமிக்கு என்று, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. அந்த வகையில், அதிமுக தலைமையால் கே.பி.முனுசாமி அசைக்க முடியாத மிக முக்கிய தலைவர்களில் ஒருவாரகவே தற்போது வரை இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் கே.பி. முனுசாமி, தற்போது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி தொகுதியில் எம்எல்ஏ வாகவும் இருந்து வருகிறார்.
இப்படியான சூழலில் தான், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பெயரில், விவசாய நிலங்களை கையகபடுத்துவதாக குற்றசாட்டு எழுந்து வந்தது.
அந்த பகுதிகளில் “தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்கிற பெயரில், அங்குள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றும், ஆனால் அதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தான், இந்த செயலை கண்டித்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏ வுமான கே.பி. முனுசாமி, இன்றைய தினம் தனது தொகுதிககு உட்பட்ட பிரச்சனைக்கு தீர்வு வேண்டி, இன்றைய தினம் திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் குதித்து உள்ளார்.
அதன் படி, சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பு தனி ஒரு மனிதராக அமர்ந்து கே.பி. முனுசாமி, தற்போது தனது உண்ணாவிரதப் போராட்த்தை இன்று முதல் தொடங்கி உள்ளார்.
குறிப்பாக, “5 ஆயிரம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய நிலத்தை தொழிற்சாலை அமைக்கிறோம் என்ற பெயரில், விவசாயிகளின் நிலத்தை பறிக்காதே மாநில அரசே பறிக்காதே” என்று, எழுதப்பட்ட பதாகையுடன் தாலுகா அலுவலகம் முன்பாக தனி ஒரு மனிதராக கே.பி. முனுசாமி இன்றைய தினம் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
கே.பி. முனுசாமியின் இந்த போராட்டத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதுடன், தமிழக அரசியலில் பேரும் பொருளாகவும் இந்த பிரச்சனை தற்போது மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.