உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம் தொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் , உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்து. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணைய தளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆதார் எண் அடிப்படையிலேயே அச்சேவைகளை பெறலாம் என்று அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மேலும், தொடர்பில்லா சேவைகளை பெறவும், ஆதாரை கட்டாயமாக்க்கப்படுகிறது. தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, அவருக்கு தொடர்பில்லா சேவைகள் வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அதில் தெரிவித்துள்ளது.
திரைபிரபலங்கள் பெரும்பாலானோர் உடல் உறுப்பு தானம் செய்துவருகின்றனர். கமல்ஹாசன் முதல் தற்போது அண்மையில் இறந்த கன்னட திரைப் பிரபலமான புனீத் ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்துள்ளார் . அதன் மூலம் 4 பேருக்கு கண்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.