தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் எதனால் கொரோனா வரும்?-மருத்துவர்கள் விளக்கம்

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் எதனால் கொரோனா வரும்?-மருத்துவர்கள் விளக்கம் - Daily news

கொரோனா தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிவடைந்து இறுதிகட்ட பரிசோதனையில் பல்லாயிரக்கனக்கான தன்னார்வலர்கள் கலந்துக்கொள்ள இருந்தார்கள். அவர்களில் முதன்மையாக கடந்த மாதம் ஹரியானா சுகாரதுறை அமைச்சர் அனில் விஜ் கலந்துக்கொண்டு, பாரத் பயோடெக்கின் கோவிட் தடுப்பூசி கோவேக்ஸின் (COVAXIN) என்ற கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.


இந்நிலையில் யாரும் சற்றும் எதிர்ப்பாரவாறு அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை உறுதிசெய்து அவர் ட்விட்டரில், தன்னை சந்தித்த நபர்கள் எல்லாம் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளுமாறு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.தற்போது ஹரியானவில் அம்பாலா கான்ட்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் நாட்டில் இதுவரை சுமார் 26,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  ஆனால் இவை தவிர அமைச்சரை தவிர வேறு எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அமைச்சருக்கு ஏற்பட தொற்றுக்கு பின் ஆய்வுபணியில் தோல்வி எனவும் தடுப்பூசியின் தரம் குறித்தும் இந்நிய அளவில் கடுமையான விவாதம் பலதரப்பில் கிளம்பியது.

இதையொட்டி மருத்துவ கழகம் மற்றும் பாரத் பயோடெக்கின் தரப்பில் இருந்து ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. “கோவாக்சினின் மூன்றாம் கட்டம் பரிசோதனை நெறிமுறையில் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் 0.5 மி.கி அளவிற்கு இரண்டு தடுப்பூசிகளை போட வேண்டும். இரண்டாவது டோஸ் முதல் டோஸ் கொடுத்த பிறகு 28-வது நாளில் தான் போடப்படும்.

அமைச்சர் அனில் விஜுக்கு நவம்பர் 20 ஆம் தேதி அன்று கேவாக்சின் முதல் டோஸ் வழங்கப்பட்டது. இதன்பின் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடுவதற்கு முன்பே அமைச்சருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்தாத வரை கோவிட்டிலிருந்து தப்பிக்க எதிர்ப்பு சக்தி கிடைப்பது கடினம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


உலகம் முழுவதும் இதுவரை தயாரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் இரட்டை டோஸ் கொண்ட தடுப்பூசி முறை தான். குறிப்பிட்ட கால இடையில் தான் இரண்டாவது டோஸ் போட முடியும். உலக நாடுகளின் கண்டுபிடித்த  ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்டு நிறுவனங்களின் தடுப்பூசிக் கூட இதுவரை 100 சதவீதம் வெற்றி பெறவில்லை. தடுப்பூசி எடுத்துக் கொண்ட 5 சதவீத மக்கள் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். அதனால் மக்கள் அச்சம் கொள்ளவோ , தடுப்பூசியின் தரம் மீது சந்தேகமோ, பரிசோதனை ஆய்வில் தோல்வி என்றோ கருத வேண்டாம் “ என்கிறது இந்திய மருத்துவ கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம்.

Leave a Comment