தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம் - ஒரு மித் !
Galatta | Dec 08, 2020, 04:59 pm
உடலில் அனைத்து செல்களின் முக்கிய ஆதாரமாக நீர் உள்ளது. உடலில் வேதியல் மாற்றங்கள் நடைபெறுதற்கு , என்சைம்கள், ஹார்மோன்கள், வைட்டமின்கள், எலக்டிரோலைட்டு செயலாற்றலுக்குகளின் நீர் தான் முக்கியபங்காற்றுகிறது. உடல் வெப்பத்தைப் பாதுகாப்பதிலும், திசுக்களின் அமைப்பை உறுதி செய்வதிலும் பெரும் பங்காற்றுகிறது.
சிலர் உடல் எடைக்கு போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறேன் என அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறார்கள். உடல் எடை குறைக்கனுமா ? முகம் பளப்பளக்கனும்? உடம்பில் எந்த நோயும் வரக்கூடாதா..? தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிங்க..! நம்மளிடம் சொல்லப்படுகிற ஹெல்த் அட்வைஸ்களில் , இது மிகவும் பிரபலமானது.
எட்டு கிளாஸ் தண்ணீர் தானே.. அதுக்கென்ன குடித்தால் போதுனு, நாமளும் அதை கேள்வி கேட்காமல் ரிமைண்டர் வைத்து கஷ்டப்பட்டு குடிக்கிறோம்.ஒவ்வொருவரின் உயரம், உடல் எடையும் எல்லாம் வேறுப்படும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, செய்யும் உடல் உழைப்பு , காலநிலை என இப்படி எல்லாம் ஒவ்வொரு தனிநபருக்கும் மாறுபடும் தானே? நிச்சயம் மாறும். இப்படி இருக்கையில் எல்லாருக்கும் மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம் தேவை என்று சொல்லவது எப்படி சரியாக இருக்கும்?
இந்த எட்டு கிளாஸ் அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று கருத்து ஒரு மித். எந்த மருத்துவ ஆய்வும் இதை உண்மை என உறுதிப்படுத்தவில்லை. நம்ம தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் (National Research Council’s Food And Nutrition Board) 1945ல் ஒரு அறிவிப்பை வெளியிடுக்கிறார்கள்.. அதில் அவர்கள் சொன்னது. ”ஒருதனி நபருக்கு , அவரின் ஒரு கலோரி உணவுக்கு 1 மில்லி தண்ணீர் தேவை. ஒரு நாளில் 2000 கலோரி உணவுகளை சாப்பிட்டால் ஒருவருக்கு 2000 மில்லி தண்ணீர் தேவைப்படும். தோராயமாக 8 கிளாஸ் தண்ணீர். மேலும், இந்த 2000 மி.லி தண்ணீரில் பெரும்பாளான அளவு மிலி , அன்றாடம் நாம் வீட்டில் தயாரித்து உண்ணும் ஆரோக்கிய உணவில் இருக்கிறது என்றது.
காலப்போக்கில் முன்பகுதியான 8 கிளாஸ் தண்ணீர் தேவை என்பதை மட்டும் பிரமபமானது. இதுதான் அந்த 8 கிளாஸ் தண்ணீருக்கு பின்னாடி இருக்கும் ஒரு குட்டி ஸ்டோரி.
மூளையை போலவே நமது உடலும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் , உடலில் இருக்கும் உறுப்புகளும் சரியா இயங்காது. அதனால் முதலில் செய்யவேண்டியது,உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பது.
இப்படி செய்யும் போது உடலில் வெப்பம் அதிகரிக்கும், அதை தணிப்பதற்கு உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். உடலை வறண்டு போக விடாமல் உடலுக்கு தேவையான தண்ணீர் கொடுத்து, அதை ஹைட்ரேட்டடா வைத்திருப்பதும் மிகவும் அவசியம். உடல் உழைப்பு இல்லாமல் , லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தால் கிளாஸ், சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை.