ரேப் அக்யூஸ்ட்டான கணவனுடன் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை! சிறையிலிருந்து அனுப்ப சொல்லி அடம் பிடிக்கும் இளம் பெண்!
கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கணவனுடன் குழந்தை பெற்றுக்கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும்
என்றும், அதற்காக அவரை பரோலில் விடுவிக்க வேண்டும்” என்றும், அவரது மனைவியான இளம் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞர், அதை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.
ஆனால், புது மாப்பிள்ளையான சச்சின், திருமணத்திற்கு முன்பாக, தனது 3 நண்பருடன் சேர்ந்து அதே பகுதியில் வேறொரு சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் செய்திருந்தனர்.
இது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், புது மாப்பிள்ளையான சச்சின் மற்றும் அவனது கூட்டாளிகள் மீதான குற்றம் நிறுக்கப்பட்டதால், அவர்களுக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்தது, நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
இதனால், புது மாப்பிள்ளையான சச்சின் மற்றும் அவனது கூட்டாளிகள் அனைவரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், குற்றவாளியான சச்சினை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட அவரது மனைவி, மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
அத்துடன், தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்றும், அவர் முடிவு செய்தார். அதன் படி, தன்னுடைய வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்திய அவரது மனைவி, நீதிமன்றத்தை நாடி, “எனது கணவருக்கு சில காலம் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று, மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “என் கணவருடன் இணைந்து நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றும், அதற்கு நீதிமன்றம் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்றும், அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவிவை விசாரித்த உத்ரகாண்ட் உயிர் நீதிமன்றம், “இது வரை இப்படி ஒரு வழக்கை சந்திக்கவில்லை” என்று, கடும் அதிர்ச்சியடைந்தது.
உத்ரகாண்ட் உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்திய நிலையில், “இதற்கு முன்பு இது போன்ற ஒரு வழக்கு நீதிமன்றம் சந்தித்ததில்லை” என்றும், நீதிமன்றம் கூறியது.
அத்துடன், “ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் இது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பதை விசாரித்து, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும்” உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் என்ன தீர்ப்பு சொல்வது என்ற தவித்த வந்த நீதிமன்றம், “இந்த வழக்கில் எங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு” மாநில அரசை கேட்டுக்கொண்டு உள்ளது.
குறிப்பாக, இந்த வழக்கில் தற்காலிகமாக நீதிமன்றம் கொடுத்த உத்தரவில், “தந்தை இல்லாமல் ஒரு குழந்தையை வளர்ப்பது தாய்க்கு மிகசவலான காரியம் என்றும், தந்தை இல்லாமல் ஒரு குழந்தை வளர்வது அதன் மன நலத்தை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது” என்றும், கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.