“மாநிலத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், ஆளுநரை நீக்கக் வேண்டும்” என்று வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உள்ள சம்பவம், பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேற்கு வங்க ஆளுநரை நீக்கக் கோரி தான், இப்படியான ஒரு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

அதாவது, மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் ஜகதீப் தங்கரை, நீக்கக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தற்போது பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ராம பிரசாத் சர்கார் என்பவர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். 

இந்த மனுவில், “மேற்கு வங்க மாநிலம் ஆளுநர் ஜகதீப் தங்கரை நீக்க வேண்டும்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, அந்த மனுவில் “ஆளுநர் ஜகதீப் தங்கர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் எல்லைகளை மீறி, மேற்கு வங்க மாநிலத்திற்கு விரோதமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்” என்று, தனது மனுவில் அந்த வழக்கறிஞர் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “மேற்கு வங்க மாநிலத்திற்கு எதிராகவும், அரசியல் அமைப்புக்கு முரணான அறிக்கைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் மேற்கு வங்க ஆளுநர், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செய்தி தொடர்பாளர் போல் செயல்பட்டு வருவதாகவும்” அந்த மனுவில், அந்த வழக்கறிஞர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார். 

இதனால், “மேற்கு வங்க ஆளுநர் பதவியில் இருந்து, ஜகதீப் தங்கரை நீக்க வேண்டும்” என்றும், அவர் தனது பொது நல மனுவில், முறையீடு செய்து உள்ளார். 

குறிப்பாக, “ஒரு மாநில ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் வழக்கு” என்றும், அம்மாநில மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த பொது நல மனு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா அமர்வில் வரும் வெள்ளிக் கிழமை அன்று விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மேற்கு வங்க அரசியல், அம்மாநிலத்தைத் தாண்டி, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பேசும் பொருளாகவும் மாறிவருது குறிப்பிடத்தக்கது.