“மனைவிகளை மாற்றி உல்லாசம்..” பாதிக்கப்பட்ட மனைவிகள் அளித்துள்ள வாக்குமூலங்கள் பற்றிய சில தகவல்கள்! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..
“மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிப்பது குறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று, பாதிக்கப்பட்ட பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் பகுதியில், அரபு நாட்டிலிருந்து வந்த ஒரு நபர், அந்த பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் உயர் வகுப்பு குடும்பத்தினரை வைத்து, 'கப்பிள் சுவாப்பிங்', 'ஒய்ப் சுவாப்பிங்' என்கிற பெயரில், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு குரூப்பினை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
அந்த வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைத்தள குரூப்பில் எல்லோரும் பெரும் பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களே அதிகம் இருந்து உள்ளனர். அதிலும் குறிப்பாக, அதில் உள்ள பலரும் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் இருந்து உள்ளனர்.
அப்போது, அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் இருக்கும் ஆண்கள் சிலர் தங்களின் மனைவியை மாற்றிக்கொண்டு அடிக்கடி உல்லாசமாக இருப்பார்கள் என்றும், அவர்களில் சிலர் அடிக்கடி ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு “நடக்க போகும் பார்ட்டிக்கு தங்களின் மனைவிகளை அழைத்து கொண்டு வந்து, எங்களைப் போல் நீங்களும் இப்படி குலுக்கள் முறையில் மாற்றி மாற்றி பிறரின் மனைவியுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டு, உங்களது ஆசையை தீர்த்து கொள்ளுங்கள்” என்று கூறி வந்ததாகவும் கூறப்பட்டது.
அதன்படி, இதில் கலந்து கொண்ட பல பெண்கள், வற்புறுத்தியே இப்படி தகாத முறையில் இப்படியான ஒரு செயலில் கணவர்களால் ஈடுபட வைக்கப்பட்டு உள்ளனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதன் காரணமாக, அந்த பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மனைவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியை அடுத்த கருகச்சால் என்னும் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கருகச்சால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த வகையில், இது குறித்து புகார் கொடுத்த இளம் பெண்ணின் கணவர் உள்பட மொத்தம் 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், “மனைவிகளை மாற்றி உல்லாசம் காண்பதற்காக, 14 குழுக்கள் சமூக வலைத்தளத்தில் இயங்கி வந்தது தெரிய வந்தது.
இந்த கும்பலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஒருவர் தற்போது வெளிநாட்டுக்கு தப்பி சென்று உள்ள தகவலும் போலீசாருக்கு கிடைத்து உள்ளது.
இந்த சூழ்நிலையில் தான், கேரளமா மாநிலம் கொச்சியில் மாநில மகளிர் ஆணைய தலைவி பி.சதி தேவி, செய்தியாளர்களிடம் இந்த சம்பவம் குறித்து பேசி உள்ளார்.
அப்போது பேசிய மாநில மகளிர் ஆணைய தலைவி பி.சதி தேவி, “ 'கப்பிள் சுவாப்பிங்', 'ஒய்ப் சுவாப்பிங்' சமூக வலைத்தள கும்பல் குறித்தான முழு விவரங்களையும் வெளிக்கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, வலியுறுத்தினார்.
“இந்த குழுக்களால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், கணவர் உட்பட பல்வேறு ஆண்களால் வெளியே சொல்லமுடியாத அளவுக்கு பல இன்னல்களை அனுபவித்து உள்ளனர் என்றும், இது போல் ஆயிரக்கணக்கான பெண்கள், இந்த அநாகரீக வலையில் சிக்கி சீரழிக்கப்பட்டு இருக்கலாம்” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார்.
மேலும், “இளம் பெண்ணின் துணிச்சல்மிக்க இந்த புகாரின் பேரிலேயே இந்த சமூக விரோதச் செயல்பாடுகள் வெளி உலகுக்கு தெரிய வந்து உள்ளது என்றும், மாநில போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் உயர் மட்ட குழு அமைத்து மனைவிகளை கைமாற்றும் சமூக விரோத கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
குறிப்பாக, “இந்த மோசமான கும்பல் பற்றி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கோட்டயம் போலீசில் புகார் கொடுக்க சென்று உள்ளார் என்றும், ஆனல் அப்போது இந்த புகாரை போலீசார் பொருட்படுத்தவில்லை என்றும், பெண்ணின் கணவரை அழைத்து சமரசம் செய்து வைத்தனர் என்றும், பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக ஒரு புதிய தகவலும்” தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அத்துடன், “இந்த சமூக வலைத்தள குழுவில் பல முக்கிய புள்ளிகள் மற்றும் பிரமுகர்களின் மனைவிகளும் இணைந்து இருந்த காரணத்தால், இந்த விசயத்தை போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டதாகவும்” கூறப்படுகிறது.
மிக முக்கியமாக, “இந்த சமூக வலைத்தள வலையில், தமிழ்நாட்டை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவிகளும் சிக்கி உள்ளார்கள் என்கிற அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, “மனைவிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பான இந்த சமூக வலைத்தள கும்பலில், துளியும் விரும்பம் இல்லாமல் கணவரின் மிரட்டலுக்கு பயந்தும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், ஏராளமான பெண்கள் இதில் ஈடுபட்டு உள்ளதாகவும்” பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருவதால், இந்த வழக்கில் இன்னும் பல அதிர்ச்சிக்கரமான விசயங்கள் வெளி உலகத்திற்கு தெரியவரலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.