“பாஜகவுக்கு மரண அடி..” 3 நாட்களில் பாஜவிலிருந்து விலகும் 7 வது எம்.எல்.ஏ! உத்தரப் பிரதேசத்தில் நடப்பது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவில் இருந்து கடந்த 3 நாட்களில் 2 அமைச்சர்கள் மற்றும் 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து உள்ளது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் களம் சூடுப் படிக்கவும் தொடங்கி இருக்கிது.
அந்த வகையில், இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் தான், தற்போது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டு இருக்கிறது.
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அம்மாநிலத்தின் முக்கிய கட்சிகள் அதி தீவிரமாக அரசியல் காய்களை நகர்த்தி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், கிட்டதட்ட 403 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.
எனினும், அங்கு ஆட்சியை தக்க வைக்க ஆளும் கட்சியான பாஜகவும், முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியும் வரிந்து கட்டி களப்பணி ஆற்றிக்கொண்டு இருக்கின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான், உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அமைச்சரவையில் இருந்து மூத்த அமைச்சரான தொழிலாளர் நலத் துறை அமைச்சரான 68 வயதான சுவாமி பிரசாத் மவுரியா, நேற்று முன் தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, அவர் பதவி விலகிய அடுத்த சிறிது நேரத்திலேயே, அவர் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிகழ்வு, பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்த சம்பவம், இந்திய அளவில் பேசும் பொருளமாக மாறிய நிலையில், எரியும் தீயில் எண்ணையை ஊற்றும் விதமாக, பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அம்மாநில அமைச்சரான தாரா சிங் சவுகானும், நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்து, பாஜகவுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தார்.
இவரும், சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாககவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி ஆளும் கட்சியாகவே இருந்தாலும், அந்த மாநில தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் கட்சியான பாஜகவிலிருந்து அடுத்தடுத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அடி மேல் அடியாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில் தான், பிரசாத் மவுரியாவின் ஆதரவாளரான மற்றொரு பாஜக எம்.எல்.ஏ. ஆளும் பாஜகவில் இருந்து தற்போது விலகி உள்ளார்.
இவர், அந்த மாநிலத்தின் பிட்ஹுனா தொகுதி எம்.எல்.ஏ.வான இருந்து வந்தார். இந்த நிலையில் தான், வினய் சக்யா திடீரென்று தற்போது பாஜகவில் இருந்து இன்று விலகி இருக்கிறார்.
அத்துடன், தனது விலகல் கடித்ததை கட்சி தலைமைக்கு அவர் அனுப்பி வைத்து உள்ளார்.
“பிரசாத் மவுரியா அடித்தட்டு மக்களின் குரல்” என கூறியுள்ள வினய் சக்யா, “அவர் தான் நமது தலைவர்” எனவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, “நான் எப்போதும் பிரசாத் மவுரியாவுடன் இருப்பேன்” என்றும், பாஜகவில் இருந்து விலகி உள்ள வினய் சக்யா தெரிவித்து உள்ளார்.
முக்கியமாக, தற்போது பாஜகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. வினய் சக்யா, கூடிய விரைவில் சமாஜ்வாதி கட்சியில் இணையலாம் என்கிற தகவல்களும் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மிக முக்கியமாக, பாஜக விலிருந்து இருந்து கடந்த 48 மணி நேரத்தில் விலகியுள்ள 7 வது எம்.எல்.ஏ முகேஷ் வர்மா ஆவார்.
உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், அங்கு தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜகவில் இருந்து பல்வேறு தலைவர்கள் விலகி மாற்று கட்சிகளில் இணையும் நிகழ்வு அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இந்திய அளவில் மிகப் பெரிய அளவுக்கு பேசும் பொருளாகவும் மாறியிருக்கிறது.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 2 அமைச்சர்களும், 5 பாஜக எம்.எல்.ஏ.க்களும் விலகி உள்ள நிகழ்வு, தேசிய அரசியலில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.