“விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனையை பொறுத்திருந்து பாருங்கள்” என்று, தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆவேசமாக பேசி உள்ளார்.
விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கு, தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
விருதுநகர் மேலத் தெருவை சேர்ந்த 27 வயதான ஹரிஹரன் என்ற இளைஞர், திருமணம் ஆன நிலையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அதே நேரத்தில், அங்குள்ள ஒரு தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 22 வயது இளம் பெண்ணை, 27 வயதான திருமணம் ஆன ஹரிஹரன், “காதலிப்பதாக” கூறி, அந்த இளம் பெண்ணிடம் நெருங்கி பழகி உள்ளார்.
இதனையடுத்து, அந்த இளம் பெண்ணை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று “திருமணம் செய்துகொள்வதாக” ஆசை ஆசையான வார்த்தைகள கூறி, அவர் உல்லாசம் அனுமபவித்து இருக்கிறார்.
முக்கியமாக, அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை அந்த நபர், தனது செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, ஹரிஹரன் தனது நண்பன் 37 வது வயதான மாடசாமியிடம் அந்த வீடியோவை காட்டி உள்ளார்.
இதனைப் பார்த்து சபலப்பட்ட மாடசாமி, அந்த வீடியோவை தன்னுடைய செல்போனில் பதிவு செய்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக, அந்த மாடசாமி, அந்த பெண்ணிடம் “இந்த வீடியோவை உன் பெற்றோரிடம் காட்டி விடுவேன்” என்று, மிட்டியே, அந்த இளம் பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனையடுத்து, அந்த வீடியோவை அவர் தனது மற்ற நண்பர்களுக்கும் அனுப்பி வைத்த நிலையில், இதனைப் பார்த்த அவரது நண்பர்களான 22 வயதான பிரவீன், 24 வயதான ஜூனத் அகமது உள்ளிட்ட மேலும் 4 பள்ளி மாணவர்கள் அந்த வீடியோவை பார்த்து, இந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
அதன் பிறகு, அந்த பெண்ணிடம் “உனது வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோம்” என்று, அவர்கள் அனைவரும் அந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
இப்படியாக, இந்த கும்பல் தொடர்ச்சியாக தொடர்ந்து 6 மாத காலமாக, அந்த இளம் பெண்ணை கடுமையாக டார்ச்சர் செய்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளது.
இதனால், கடும் விரக்தியடைந்த அந்த இளம் பெண், 181 இலவச தொலைபேசி எண்ணில் புகார் கூறி உள்ளார்.
இது தொடர்பாக விருதுநகர் ரூரல் போலீசார் விசாரணை செய்த நிலையில், “ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது உள்ளிட்ட மற்ற 4 பள்ளி மாணவர்கள்” இந்த இளம் பெண்ணை தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சம்மந்தப்பட்ட அந்த 8 பேர் கொண்ட கும்பலையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், இந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பபடுத்தி உள்ளது.
தற்போது, இந்த பிரச்சனையை தமிழக பாஜக தற்போது கையில் எடுத்து போராட்டத்தை அறிவித்து உள்ளது.
அதே போல், விருதுநகர் பாலியல் பலாத்கார பிரச்சனையை இன்றைய தினம் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய தினம் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனையடுத்து, இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடுகிறேன்” என்று, அதிரடியாக அறிவித்தார்.
அத்துடன், “60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்” என்றும், அவர் சூளுரைத்தார்.
“விருதுநகர் சம்பவத்தை மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிடுகிறேன்” என்றும், முதல்வர் ஆவேசமாக பேசினார்.
மேலும், “பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல் இல்லாமல், குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறோம் என்பதை பாருங்கள் என்றும், வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போல் இல்லாமல் நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்” என்றும், முதல்வர் கூறினார்.
இறுதியாக, “இந்த வழக்கில் நாங்கள் எப்படி விரைவாக தண்டனை பெற்றுத் தருகிறோம் என்பது, இந்தியாவுக்கே இந்த வழக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும்” என்றும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சூளுரைத்தைார்.