“ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” எனப்படும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரும் நிலாவை காண, உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் இன்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உலக அதிசயங்கள் யாவும் எப்போதாவது ஒரு முறைதான் நிகழ்வதுண்டு. அப்படியான அதியங்களில் ஒன்று இன்று இரவு, இந்த உலகத்தில் நிகழ இருக்கிறது என்றால், நம்ப முடிகிறதா? ஆம், நமது அம்மாக்கள் நமக்கு அந்த நிலாவை காட்டிதான சோறு ஊட்டினார்கள். இந்த பழக்கம், தமிழ்நாடு உட்பட, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் நடைமுறையில் இருக்கவே செய்கிறது.
அப்படியான வெள்ளை நிறம் கொண்ட அந்த நிலா, இன்றைய தினம் யாரும் எதிர்பாரத ஒரு மாற்றத்தை வெளிப்படுத்த இருக்கிறது.
அதாவது, இடப்பாண்டு 2022 ஆம் ஆண்டில், வானில் பல அறிய நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன.
அதன் படி, வானில் ரெட் மூன் உள்பட பல்வேறு மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ உள்ளன.
அந்த வரிசையில் தான், இன்றைய தினம் “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” என்ற அதிசயம் வானில் நிகழ இருக்கிறது.
அதாவது, “நிலவின் சுற்றுப் பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும் போது, இந்த அரிய நிகழ்வு நடக்கிறது” என்று, நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வை இன்னும் சுருக்கமாக சொல்வதாக இருந்தால், “சந்திரன் தனது சுற்றுப்பாதையில், பூமிக்கு மிக அருகில் வந்த அழகான வானியல் நிகழ்வை ஏற்படுத்தும்” என்றே விஞஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த அற்புதமான “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” நிகழ்வானது, இந்தியாவில் தெரியாது என்றும், இதனால் பொது மக்கள் இதனை இணையத்தின் வாயிலாக பார்க்க முடியும் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” நிகழ்வை இன்று இரவு வானில் பார்க்க முடியும் என்றும், விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக, இந்த“ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” நிகழ்வு என்பது, வானத்தில் உள்ள முழு நிலவு அப்படியே சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும்.
அதாவது, “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” என்றால், பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு மிக குறைவாக இருக்கும் போது, நிலவின் அளவு புவியில் இருந்து சற்று பெரிதாக தோன்றும் என்றும், அந்த சமயத்தில் ஏற்படும் பௌர்ணமி நிலவு, வழக்கத்தை விட மிகப் பெரிதாக இருக்கும் என்றும், இதுவே “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” என்று, அழைக்கப்படுவதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.