“கொரோனாவால் ஆண்மை கோளாறா?” மருத்துவமனைக்கு நடையாய் நடக்கும் தம்பதிகள்!
கொரோனா பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இதனால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் உள்ளதாகவும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உருமாறிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசால் ஆண்களையும், தம்பதிகளையும் கதிகலங்க வைத்திருக்கிறது.
கொரோனா வைரஸ், இந்த உலகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. அது, தற்போது உருமாறிப் போய், கொரோனா தொற்று ஆண்களுக்கு வாரிசு பாக்கியத்தை கேள்வி குறியாக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
அதாவது, கொரோனா வைரஸ், இந்த உலகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. அது, தற்போது உருமாறிப் போய், கொரோனா தொற்று ஆண்களுக்கு வாரிசு பாக்கியத்தை கேள்வி குறியாக்கி உள்ளதாக கடந்த ஆண்டு வெளியான ஒரு ஆய்வு கூறியிருந்தது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய புதிதில், “கொரோனா பீதியால், உடலுறவில் ஈடுபடலாமா?” என்ற அச்சமும், கேள்வியும் அனைவருக்கும் எழுந்தது.
இதனால், கொரோனா பீதியால், உலகம் முழுமைக்கும் கை கொடுத்து, கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தும் மேல்நாட்டுக் கலாச்சார பழக்கம் மறைந்து, மனிதர்களுக்குள் இடைவெளி ஏற்பட்டது என்பதுதான் நிஜம்.
அதன் தொடர்ச்சியாக, “உடல் சார்ந்து தாம்பத்திய உடலுறவைக் கட்டுப்படுத்துவது அவசியம்” என்றே கூறப்பட்டது.
பின்னர், கொரோனா முதல் அலைக்குப் பிறகு, ஜெர்மன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், “100 பேரில் 84 பேரின் இனப்பெருக்க வயதில் இருக்கும் ஆண்களின் உயிரணுக்கள், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது” அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது,
இவற்றுடன், “உயிரணுக்களின் உருவம் சுமார் 400 சதவீதம் அளவுக்கு மாற்றம் அடைந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது” என்றும், தெரிவிக்கப்பட்டது.
இப்படியாக, “பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள், தங்களது மனைவியை கருவுறச் செய்வதில் பெரும் சிக்கலாக இருப்பதாகவும், அது பெரும் சவளாக இருப்பதாகவும் ஆய்வுகள் வெளியாகி” கடும் அதிர்ச்சியை அளித்தனர்.
இதனால், புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள் மற்றும் வாரிசுகளுக்காகக் காத்திருக்கும் ஆண்கள் மற்றும் தம்பதிகள் பெரும் கலக்கம் அடைந்து வந்தனர்.
தற்போது, அதன் தொடர்ச்சியாகவே, கொரோனா பரவத் தொடங்கி 3 ஆண்டுகள் ஆன பின்னும், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் தனி மனித வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்றே கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது, கொரோனாவுக்கு பிறகு “பாலியல் ரீதியான மருத்துவ நிபுணர்களின் உதவியை நாடி வரும் தம்பதிகள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளதாகவும்” செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அதில், “பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களே தங்கள் கணவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதாகவும்” தகவல்கள் தெரிவிக்கின்றன.
“கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் பலருக்கும் தற்போது பாலியல் பிரச்சினைகளும் அதிகரித்து உள்ளது” என்றும், கூறப்படுகிறது.
இது குறித்து, மும்பை முலுண்ட் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ஆலோசகரும், மனநல மருத்துவர் மற்றும் பாலியல் நிபுணரான டாக்டர் சஞ்சய் குமாவத் பேசும் போது, “மன உளைச்சல் காரணமாக தங்கள் கணவர் உடலுறவுக்கு தயக்கம் காட்டுவது குறித்து பல பெண்கள் அவரிடம் ஆலோசனை கேட்டதாக” அவர் குறிப்பிட்டு உள்ளார்.
“பாலியல் பிரச்சனைகள் மற்றும் குறைந்த ஆண்மை பற்றி, கார்ப்பரேட் நிறுவன பணியாளர்கள் பலரும் என்னிடம் வந்து சிகிச்சை பெறுகிறார்கள் என்றும், அவர்கள் அனைவரும் அலுவலகத்தின் பணி தொடர்பான டார்கெட்டை முடிப்பதற்காக, வார இறுதி இடைவெளி கூட இல்லாமல், காலை முதல் இரவு வரை வேலை செய்து கொண்டே இருப்பதால், அவர்களின் பாலியல் வாழ்க்கையை பாதிக்கிறது” என்றும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார்.
அதே போல், மும்பையைச் சேர்ந்த பாலியல் வல்லுனர்களில் ஒருவரான டாக்டர் பிரகாஷ் கோத்தாரி இது பற்றி பேசும் போது, “கொரோனா காரணமாக பல தம்பதிகள் வீட்டில் ஒன்றாக இருக்கவும், வீட்டிலிருந்து வேலை செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும், இந்த ஒரு விஷயம் அவர்களுக்குள் அடிக்கடி சண்டையிடுவதற்கு வழி வகுத்தது” என்று குறிப்பிட்டு பேசும் அவர், “பெண் துணையை சங்கடப்படுத்தி விரக்திக்கு வழி வகுத்ததோடு, இதுவே அவர்களது பாலியல் ஆசையை குறைத்து உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அதே போல், “பெங்களூரில் உள்ள பாலியல் வல்லுநர் மற்றும் டாக்டர் பத்மினி பிரசாத் இது குறித்து கூறும்போது, “கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு பல தம்பதிகள் தாம்பத்தியம் பற்றி ஆலோசனை பெறுவதாகவும் குறிப்பிட்ட அவர், “கொரோனா தாக்கம் பல ஆண்களிடம் காணப்பட்டது என்றும், அவர்கள் விறைப்புத்தன்மை இல்லாமல் மற்றும் முன்கூட்டிய விந்து தள்ளல் ஆகியவற்றால் பாதிக்கட்டு உள்ளதாகவும்” சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், “இப்படியான பிரச்சனைகள், அவர்களின் பாலியல் வாழ்க்கையை பாதிப்பதாக, பல ஆண்களும் கூறுவதாக” அவர் கவலைத் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.