இளம் மனைவியை உடல் முழுதும் கடித்து வைத்து வயதான கணவன் செக்ஸ் டார்ச்சர்! பல்செட்டை பிடுங்கி சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு
“இளம் மனைவியை, அந்தரங்க உறுப்பு உட்பட உடல் முழுதும் கடித்து வைத்த கொடூர வயதான கணவனின் பல்செட்டை பிடுங்கி சமர்பிக்க வேண்டும்” என்று, நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன்னை விட 27 வயது மூத்தவரான தனது 67 வயது கணவர் மீது ஒரு பகிரங்கமான புகார் ஒன்றை கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
“என்னை உடலுறவின் போது துன்புறுத்துவதாக” தனது 67 வயது கணவர் மீது , அந்த அப்பாவி 27 வயது இளம் மனைவி புகார் அளித்திக்கிறார்.
அதாவது, இந்தூரைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணுக்கும், குஜராத்தைச் சேர்ந்த இந்த 67 வயதாகும் கிரிஷ் குமார் சோனி என்ற நகைத் தொழில் செய்து இந்த முதியவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி அன்று இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்து உள்ளது.
திருமணத்தின் போது, அந்த இளம் பெண்ணை விட, அவரது கணவர் 27 வயது மூத்தவர். எனினும், இவர்கள் இருவரும் சம்மதம் தெரிவித்த நிலையிலேயே இந்த திருமணம் நடந்து உள்ளது.
அதிலும், 67 வயதாகும் கிரிஷ் குமார் சோனிக்கு, இது 2 வது திருமணம் ஆகும்.
இப்படி வயது வித்தியாசத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்துக்கு பிறகு, அந்த இளம் பெண், குஜராத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.
இந்த நிலையில் தான், “முதலிரவு அன்றே, வயதான தனது கணவன் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும் போது, தனது உடல் முழுவதும் பல்லால் கடித்து வைத்ததாக” அந்த பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
அத்துடன், “எனது பிறப்புறுப்பு உட்பட எனது உடல் முழுவதும் எனது கணவர் கடித்து வைத்ததால், நான் பலத்த காயம் அடைந்தேன் என்றும், இப்படியாக ஒவ்வொரு முறை பாலியல் உடலுறவில் ஈடுபடும் போதும், எனது கணவர் இதே போல கொடூரமான முறையில் என்னுடன் உறவில் ஈடுகிறார்” என்றும், அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார்.
குறிப்பாக, “எனது கணவருக்கு வயது அதிகம் என்பதால், அவரின் பற்கள் அனைத்தும் விழுந்து விட்டன என்றும், தற்போது அவர் பல்செட் தான் பொருத்தி உள்ளார் என்றும், இப்படி இருக்கும் போது அவர் என்னை உடல் முழுக்க கடித்து வைக்கிறார்” என்றும், அந்த பெண் முறையிட்டு உள்ளார்.
மேலும், “எனது கணவரின் இந்த கொடூரத்தை நான் மனைவி எதிர்த்தபோது, என்னை என் கணவர் அவரை மிரட்டி வருகிறார் என்றும், இது பற்றி வெளியே கூறினால் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் என்றும், அவர் என்னை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும்” குற்றம்சாட்டி உள்ளார்.
இப்படியாக, “தினமும் தொடர்ந்ததால், ஒரு கட்டத்தில் என் கணவரின் கொடுமை தாங்க முடியாமல், கடந்த டிசம்பர் மாதம் அந்த வீட்டில் இருந்து தப்பித்து என் சொந்த ஊரான இந்தூருக்கு வந்து விட்டதாகவும், அதன்படியே, இங்கு இந்த மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறேன்” என்றும், கூறியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட அந்த மனைவி தொடர்ந்த இந்த வழக்கை நீதிபதி விசாரித்தார்.
அப்புாது, மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, “கணவர் கடித்ததால் ஏற்பட்ட காயங்கள் தொடர்பான புகைப்படங்களை காட்டி” உள்ளனர்.
இதனைப் பார்த்த நீதிபதி, “அந்த பெண்ணின் கணவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவருடைய பல் செட்டை பிடுங்கி உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் படியும்” போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனிடையே, இளம் மனைவி புகார் அளித்த நிலையில், அவரது வயதான கணவன் அது முதல் தலைமறைவாகிவிட்டது குறிப்பிட்டத்தக்கது. எனினும், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.