இந்தியாவுக்கு வருமா ரஷ்யாவின் தடுப்பூசி? - ஆலோசனையில் தேசிய ஆய்வுக்குழு!

இந்தியாவுக்கு வருமா ரஷ்யாவின் தடுப்பூசி? - ஆலோசனையில் தேசிய ஆய்வுக்குழு! - Daily news

உலகின் முதல் தடுப்பூசி எனக் கூறப்படும், ரஷ்ய தடுப்பூசி, கேமாலயா ஆராய்ச்சிக் கழகம் (Gamaleya Research Institute) மற்றும் ரஷ்ய ரானுவ அமைச்சகம் உருவாக்கியது.

ஜூன் மாத்தில் தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கான ஆய்வுகள் யாவும், வெறும் மூன்று மாத சோதனையில் முடிவடைந்திருப்பது, பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில், மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. இந்த அறிவிப்பு, அறிவியலாளர்களிடியே பல கேள்விகளை எழுப்பி வந்தது.

தனது சோதனையின் முடிவில், மனிதர்கள் மீது வெற்றிகரமாகச் சோதனை செய்து முடித்துள்ளதாக ரஷ்யா சில தினங்களுக்கு முன் அறிவித்து இருக்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து இந்த ஆராய்ச்சியைச் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த நாட்டு ராணுவத்தின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டது.

இந்த ஆராய்ச்சிக்காக அந்த நாட்டு ராணுவம், தனது ராணுவ வீரர்களை அனுப்பி இருந்தது. இந்த மனித சோதனையின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வெற்றி அடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்த நிலையில், மூன்றாவது கட்ட சோதனைக்கு முன்னரே மருந்து விற்பனைக்கு வரப்போவதாக ரஷ்ய அரசாங்கம் கூறியது. இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில் இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்க்கு எதிராக நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும், இந்த மருந்தின் உற்பத்தி பெரிய அளவில் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு மட்டும் வரவில்லை. மாறாக, இப்போதைக்கு முன்களப் பணியாளர்களுக்கும், செப்டம்பருக்குப் பின் மக்களுக்கும் இந்த மருந்தை வழங்கவிருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. 2020 இறுதிக்குள் 3 கோடி மருந்துகளைத் தனது நாட்டிற்குள் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. எந்தத் தகவலும் இன்னமும் அரசு தரப்பில் உறுதிசெய்யப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம் இன்னமும் எந்த மருந்தையும் அங்கீகரிக்காத நிலையில், ரஷ்யா இப்படி வேக வேகமாக செயல்படுவது கண்டனத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ‘‘இன்று காலை உலகின் முதன்முறையாக கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி எனது மகள் உடலில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே ஆய்வுக்கான தன்னார்வலர்கள் அனைவரும், ரஷ்யாவின் ரானுவ வீரர்கள் என ரஷ்யா குறிப்பிட்டிருந்ததால், இவர்கள் அனைவரும் தன்னார்வலர்களாகத்தான் வந்தார்களா அல்லது அரசின் நிர்ப்பந்தத்தால், சோதனை எலிகளாக உபயோகப்படுத்தப்பட்டனரா என்பது உறுதியாக தெரியவில்லை என கண்டனம் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றைய தினம் தனது மகளுக்கே சோதனை செய்திருப்பதாக ரஷ்ய அதிபர் கூறியிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வகுத்த எந்த நெறிமுறையையும் பின்பற்றாவிட்டாலும், ரஷ்ய அரசு, இதை விநியோகிக்க திட்டமிட்டுவிட்டது விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, இந்த ஆண்டு இறுதிவரை மாதத்துக்கு - இத்தனை ஆயிர தடுப்பூசி என மருந்து தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அடுத்த வருடத்தில், மில்லியன்களில் தடுப்பூசி தயாரிக்கப்படுமாம்.

யார் என்ன சொன்னாலும், இதுதான் கொரோனாவுக்கான தடுப்பூசி என்று சொல்லி ஆக.12ல் களத்தில் இறங்குகிறது ரஷ்யா. சர்ச்சைக்குரிய வகையில் தடுப்பூசியை கண்டறிந்துவிட்டு, `இதுதான் சிறந்த தடுப்பூசி' என ரஷ்யா சொல்வது, இது முதன்முறை அல்ல. இதற்கு முன், எபோலாவுக்கு தடுப்பூசி கண்டறிந்துவிட்டதாக ரஷ்யா இப்படித்தான் சொல்லிக்கொண்டது.

`ரஷ்யாவை பொறுத்தவரை, அவர்கள் தடுப்பூசி கண்டறிய முற்பட்டது மக்கள் நலனுக்காக இல்லை. நாங்கள்தான் முதலில் கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டறிந்தோம் என்ற பெயருக்காகத்தான் இவர்கள் போராடுகிறார்கள். இது ரொம்பவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்' என்கிறார்கள் உலக அறிவியலாளர்கள்.

தற்போது, இந்த தடுப்பூசி இந்தியாவில் விநியோகிக்கப்படுமா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. இதுபற்றி நாளை தேசிய ஆய்வாளர்கள் குழு முடிவு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது

Leave a Comment