டெல்லி நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு! அதிர்ச்சி.. பரபரப்பு..
டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் இன்று காலை எப்போதும் போலவே வழக்கமான பணிகள் நடந்துகொண்டிருந்தன.
அப்போது, நீதிமன்ற வாளகத்தில் அன்றாட அலுவல் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், காலை 10. 30 மணி அளவில் திடீரென பயங்கர வெடி சத்ததுடன் ஒரு மர்ம பொருள் வெடித்து சிதறியது.
திடீரென்ற ஏற்பட்ட பயங்கர வெடி சத்தத்தைக் கேட்டு நீதிமன்ற வாளகத்தில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
இதனால், அந்த இடம் சிறுது நேரம் தீ பற்றி எரிந்ததால், சிறுது நேரத்திற்கு அதனை அணைக்க கூட யாரும் முன்வரவில்லை.
இதனையடுத்து, நீதிமன்ற வாளகத்தில் காவலுக்கு நின்றிருந்த போலீசார், வெடி சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்து வந்த போது, அங்குள்ள அறை எண் 102 க்குள் சென்று பார்த்து உள்ளனர்.
அப்போது, அந்த அறை எண் 102 க்குள் இருந்த ஒரு லேப் டாப் பையில் இருந்த ஒரு மர்ம பொருள் வெடித்து சிதறியது தெரிய வந்தது.
அத்துடன், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவ குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அங்குள்ள நிலைமையை சிறுது நேரத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் எந்த வித உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது நேரத்தில், இந்த வெடி விபத்தைத் தொடர்ந்து அங்கு சிறிய தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் காயமடைந்து உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, தீக்காயம் அடைந்த அந்த நபர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுளதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பேசிய டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரனாவ் தயால், “லேப் டாப் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், என்றாலும் அதன் உண்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்” தெரிவித்தார்.
மேலும், நீதிமன்ற வாளாகத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, அங்கு நீதிமன்ற வழக்கு விசாரணைகள் அனைத்தும் அப்படியெ நிறுத்தப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, இதே ரோகினி நீதிமன்ற அறையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் வேடமிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.