“அஜய் மிஸ்ராவை நீக்காமல், நியாயமான விசாரணை சாத்தியமில்லை” குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்திய ராகுல் காந்தி
லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து முறையிட ராகுல் காந்தி தலைமையிலான குழுவினர் முறையிட்டனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி அன்று விவசாயிகள் நடத்திய பேரணியின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் உட்பட மொத்தம் 9 பேர் வரை உயிரிழந்தனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் யாவும் தொடர்ந்து மிக கடுமையாக குரல் கொடுத்த நிலையில், மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்து உள்ள காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
ஆனாலும் இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னும் பதவி நீக்காமல், செய்யாமல் இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த நிலையில் குடியரசுத் ராம்நாத் கோவிந்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி, ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத், கே.சி வேணுகோபால் ஆகியோர் சற்று முன்பாக நேரில் சென்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, “லகிம்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குறிப்பாக, “விவசாயிகள் படுகொலையில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்றும், குடியரசுத் தலைவரை அவர்கள வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக மனு ஒன்றையும் அளித்தனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “லகிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரம் தொடர்பாக இன்றே மத்திய அரசுடன் கலந்துரையாடுவதாக குடியரத் தலைவர் உறுதி அளித்து உள்ளதாக” குறிப்பிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “லகிம்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருக்க நீக்க வேண்டும் என்றும், லகிம்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்” வலியுறுத்தியதாகவும் கூறினார்.
“அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்காத வரை இந்த வழக்கின் விசாரணையானது, துளியும் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் லகிம்பூர் விவகாரத்தை விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றும், ராகுல் காந்தி தெரிவித்தார்.