ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய பிரதமர் மோடி! “எந்த நாட்டு தலைவர்களுக்கு என்னென்ன பரிசு பொருட்கள்?”

ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய பிரதமர் மோடி! “எந்த நாட்டு தலைவர்களுக்கு என்னென்ன பரிசு பொருட்கள்?” - Daily news

ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய பிரதமர் மோடி, எந்த நாட்டு தலைவர்களுக்கு என்னென்ன பரிசு பொருட்களை அவர் வழங்கி உள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம்.

அதாவது, ஜி 7 நாடுகளின் மாநாடு, தற்போது ஜெர்மனியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு, இந்திய கலைநயத்தை உணர்த்தும் விதமாக, ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியாக அதுவும் தனித் தனியாக பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்து, அவர்களை ஆச்சரியத்தில் அசத்தினார்.

அந்த வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 7 பணக்கார நாடுகள் இணைந்து இந்த ஜி-7 மாநாட்டை நடத்தின.

அந்த வரியைில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில், பருவநிலை மாற்றம், எரிசக்தி, சுகாதாரம் ஆகியவை தொடர்பான அமர்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, இந்தியா சார்பிலான கருத்துக்களையும் முன்வைத்தார் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி,

- அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தயாரிக்கப்பட்ட குலாபி மீனாகரி புரூச் மற்றும் கப்லிங் செட்களை, பிரதமர் மோடி பரிசாக வழங்கி, அவரது கவனத்தை ஈர்த்தார்.

- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, உத்தரப் பிரதேச மாநிலம் புலாந்ஷரில் தயாரிக்கப்பட்ட பிளாட்டினமால் வர்ணம் தீட்டப்பட்ட தேநீர் கப்களை, பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். 

- ஜெர்மன் சான்சிலர் ஓலப் ஸ்கால்ஜ்க்கு, உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் தயாரிக்கப்பட்ட கலைநயத்துடன் கூடிய வெண்கல குவளையை பிரதமர் மோடி பரிசளித்து அசத்தினார்.

- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, கைகளால் பின்னப்பட்ட பட்டு கம்பளத்தை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கி, அவரது கவனத்தை ஈர்த்தார். 

- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு, லக்னோவில் தயாரிக்கப்பட்ட ஒரு லிட்டர் அளவிலான பாட்டீல்கள் கொண்ட ஜர்தோசி பெட்டியை பிரதமர் மோடி பரிசாக வழங்கி அசத்தினார்.

- இத்தாலி பிரதமர் மாரியே ரகிக்கு, ஆக்ராவில் தயாரிக்கப்பட்ட மார்பிள் இன்லே டேபிள் டாப் பை பரிசாக வழங்கி பிரதமர் நரேந்திர மோடி அசத்தினார்.

- ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோவுக்கு, உத்தரப் பிரதேச மாநிலம் நிசாமாபாத்தில் செய்யப்பட்ட கருப்பு மண்பாண்ட பண்டங்களை, பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். 

- தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசாவிற்கு, சத்தீஸ்கர் மாநிலத்தின் ராமாயணத்தை மைய பொருளாக கொண்ட டோக்ரா கலை பொருட்களை, பிரதமர் மோடி பரிசாக வழங்கி அசத்தினார்.

- செனகல் நாட்டு அதிபர் மக்கி சல்லுக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சித்தப்பூரில் தயாரிக்கப்பட்ட கோரைப்புல்லால் செய்யப்பட்ட கூடைகள் மற்றும் பருத்தி துணிகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கி, அவரது கவனத்தை ஈர்த்தார்.

- இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோவுக்கு அரக்கில் தயாரிக்கப்பட்ட ராமர் தர்பாரை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.

இப்படியாக, ஜெர்மனியில் நடந்த ஜி 7 மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு, இந்திய கலைநயத்தை உணர்த்தும் விதமாக தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்து அசத்தியது, உலக அளவில் கவனம் ஈர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment