கர்நாடக மாநிலத்தில் பெலாகவி மாவட்டத்திலுள்ள காவல்நிலையத்தில், பெற்றோர் ஒருவர் அவரது மகளைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதையொட்டி காவல்துறை விசாரணையில், அந்த பெண், ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்தது தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து காவல்நிலையம் வந்து பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியதால், அந்த பெண்ணின் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கத் தொடரப்பட்டது.


அந்த பெண் தொடர்ந்த வழக்கில், ‘ போலீஸ் அதிகாரி  கர்நாடாக மாநிலத்துக்கு வரச் சொல்லி வலுயுத்தியதாகவும், அப்படி வரவில்லை என்றால் என்னுடைய கணவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டுவதாகவும்’ தெரிவித்துள்ளார். 


இந்த வழக்கு, 2 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ’18 வயதைக் கடந்த யாவருக்கும் அவர்கள் விரும்பமானவர்களைத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை இருக்கிறது. படித்த இளைஞர்கள் வெவ்வேறு சாதிகளில் கலப்புத்திருமணங்கள் செய்துக்கொள்கிறார்கள்.

இதுப்போன்ற கலப்புத்திருமணங்களால் தான் சாதி, மத மோதல்களை குறைக்க முடியும். ஆனால் இவ்வாறு கலப்புத் திருமணங்கள் செய்துக்கொண்டு இளைஞர்கள் பல மிரட்டலை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. சமூக பொறுப்புடன் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க காவல்துறை அதிகாரிக்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளனர்