ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸில் பிஏ.2 என்ற புதிய மரபணு மாறுபாடு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் 3 வது அலையாக தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், அடுத்தடுத்து மரபணு மாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று, பல வகைகளிலும் தொடர்ச்சியாக பரவி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெகுவாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இப்படியாக டெல்டா, ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் தொற்று வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் பரவி வரும் இந்த சூழலில், ஒமைக்ரானின் மாறுபட்ட வைரஸ் வகை ஒன்று தற்போது அதி வேகமாகப் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியாக, ஒமைக்ரானின் மாறுபட்ட வகையான கள்ள ஒமைக்ரான் என்று அழைக்கப்படும், இந்த வகையான வைரஸ் தொற்றின் தாக்கமானது தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் சத்தமின்றி பரவிக்கொண்டு இருக்கிறது.

இந்த ஒமைக்ரான் திரிபை பற்றி விளக்கி உள்ள உலக சுகாதார நிறுவனம், “B.1.1.529 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒமைக்ரான் வைரஸ் BA.1, BA.2 மற்றும் BA.3 என்ற 3 முக்கிய உட்பிரிவுகளைக் கொண்டு உள்ளதாக” கூறியுள்ளது.

“அந்த வகையில் பார்க்கும் போது, உலக அளவில் அதிகம் பரவிய ஒமைக்ரான் வைரஸ் BA.1 வகையாக உள்ளது என்றும், ஆனால் இப்போது டென்மார்க் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் BA.2 வகையைச் சேர்ந்த கொரோனாவே அதிகம் பரவி வருகிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும், டிசம்பர் மாத்தின் பிற்பகுதியில் இருந்து ஜனவரி மாத்தின் தற்போதைய நடுப்பகுதி வரையிலான 2 வாரங்களில், BA.2 வகை தொற்று 20 சதுவீத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்ந்து உள்ளதாகவும்” டென்மார்க் அரசு கூறியிருந்தது.

இப்படியான சூழலில் தான், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,55,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில், “ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸில் பிஏ.2 என்ற புதிய மரபணு மாறுபாடு இந்தியாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, இங்கிலாந்தில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிஏ.2 வகை புதிய மரபணு மாறுபாடு வைரஸானது; ஸ்வீடன், டென்மார்க் உள்பட மொத்தம் 40 நாடுகளில் தற்போது பரவி வருகிறது.

அந்த வகையில், இந்த பிஏ.2 என்ற புதிய மரபணு மாறுபாடு வைரஸ், இந்தியாவில் பெரும்பாலானோருக்கும் தற்போது தொற்றி உள்ளது. 

இதனை, ஆர்டிபிசிஆர் பரி சோதனையிலும் கண்டறிய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 

குறிப்பாக, மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 21 பேருக்கு இந்த புதிய மாறுபாட்ட கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, குறிப்பிட்ட ஒரு தனியார் ஆய்வு கூடத்தில் கடந்த 6 ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. 

அப்படி, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதில், மற்ற 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 3 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மிக முக்கியமாக, பாதிக்கப்பட்டவர்களில் 18  வயதை தாண்டிய 15 பேரும், இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தியவர்கள் என்கிற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. இதனால், இந்திய மக்கள் இந்த புதிய வகையிலான கொரோனாவை கண்டு பீதியடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.