பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். 

அதன்படி, 69வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் இன்று உரையாற்ற உள்ளார். இன்று காலை 11 மணி அளவில் ஒலிபரப்பாகிய அந்த நிகழ்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சீனா உடனான எல்லைப் பிரச்னை மற்றும் புதிய வேளாண் மசோதாக்கள் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், பிரதமர் மோடி பேசுகையில், தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலையைப் பற்றி பேசினார். தமிழகத்தின் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது என்றார் மோடி.  மேலும் பேசியவர், தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறுவதை செய்து வருவதாகவும், கதை சொல்வது ஒரு அற்புதமான கலை என்றும் அவர் குறிப்பிட்டார். பஞ்சதந்திர கதைகள் போன்றவை இந்தியாவின் சிறப்பான பாரம்பரியத்தை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம், ராஜபக்சேவுடன் காணொலி வாயிலாக பேசியிருந்தார் பிரதமர் மோடி. அப்போது, `எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம் என்றும் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

இந்தியா இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா - இலங்கை இடையேயான உறவுகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அண்டை நாட்டுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையின் படியும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாட்டின் படியும் எங்கள் அரசு, இலங்கை அரசுடனான உறவுக்குச் சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், என்றும் சமத்துவம், நீதி, அமைதி, கவுரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைதி மற்றும் சமாதானத்துக்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும். இந்த உரையாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ``எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன். அபிவிருத்தி,பொருளாதார உறவு ,சுற்றுலாத்துறை,கல்வி,கலாசாரம், பரஸ்பர நலன் அடிப்படையிலான பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் உட்பட தனித்துவமிக்க இந்திய இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம்" என்றும் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.


மேலும் நேற்றைய தினம் ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது ஆண்டு கூட்டத்திலும் மோடி கலந்துக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வு, நியூயாா்க் நகரில் நடைபெற்று வருகிறது. க்ரோனா தொற்று காரணமாக, பெரும்பாலான உலக நாடுகளின் தலைவா்கள் காணொலி முறையில் இந்தக் கூட்டத்தில் உரையாற்றி வருகின்றனா். சில நாட்டுத் தலைவா்களின் விடியோ உரைகள் கூட்ட அரங்கில் திரையிடப்படுகின்றன.

பிரதமா் நரேந்திர மோடியின் விடியோ உரை, ஐ.நா. பொதுச் சபையில் உள்ளூா் நேரப்படி காலை 9 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) ஒளிபரப்பானது. அதில், பயங்கரவாதம், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மோடி பேசினார்.

பிரதமர் தனது உரையில்,“ 75 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் அவை பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. 130 கோடி இந்தியர்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதற்காக நான் இந்த சபைக்கு வந்துள்ளேன். ஐநாவின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என்றார்.

மேலும்,“ஐக்கிய நாடுகள் அவை தொடங்கியபோது இருந்ததை விட உலகம் தற்போது மாறுபட்ட காலத்திற்கு வந்துள்ளது. கரோனாவிற்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் அவையின் பங்கு என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் அவை தனது செயல்பாடுகளை மாற்ற வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பிரதமர் மோடி தனது உரையில் ஐக்கிய நாடுகள் அவையின் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளப்படுவதற்காக இந்தியா நீண்டகாலமாக காத்திருக்கிறது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி தனது உரையில் உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது எனக் குறிப்பிட்டார்