14 எம்பி.,க்களுக்கு மழைக்கால கூட்டத்தொடரில் விடுப்பு
By Nivetha | Galatta | Sep 17, 2020, 02:42 pm
கொரோனா அச்சுறுத்தல், எல்லையில் சீன படைகளின் அத்துமீறல் மற்றும் பொருளாதார பிரச்சினையில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகள் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் செப் 14 -ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் உட்பட 14 எம்.பி.க்கள் உடல்நிலைக் காரணங்களால் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதிலிருந்து விடுப்பு பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதிவரை நடைபெறுகிறது. சமூக இடைவெளி, நோய்த் தொற்று பரிசோதனைகள் உள்ளிட்ட கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரை மாநிலங்களவையும், மதியம் 3 மணியிலிருந்து 7 மணி வரை மக்களவையும் நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால் 200-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஏற்கனவே அவை நடவடிக்கைகளில் பங்கேற்காத நிலையில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், அன்புமணி ராமதாஸ், நவநீதகிருஷ்ணன், ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 14 எம்பிக்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என மாநிலங்களவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். எனவே, அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து 14 எம்பி.,க்களுக்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 14 பேரில் 11 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் இரு அவைகளிலும் 30-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சுரேஷ் அங்காடி ஆகியோரும்மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பார்லிமென்டில், மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட ராஜ்யசபா எம்.பி.,க்கள், 14 பேர், உடல்நலத்தை சுட்டிக்காட்டி, விடுப்பு கோரினர்.
'கொரோனா' வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பார்லிமென்டில், கடந்த, 14ம் தேதி முதல், மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே, எம்.பி.,க்கள் பலரும், வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், இதர எம்.பி.,க் களும், பார்லிமென்ட் ஊழியர்களும் பீதியடைந்து உள்ளனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர், உடல்நலத்தை சுட்டிக்காட்டி, விடுப்பு கடிதம் அனுப்பி வைத்தனர். அதில், இவர்கள் இருவரும், நடப்பு கூட்டத்தொடர் முழுதும் பங்கேற்க இயலாது என, குறிப்பிட்டு உள்ளனர்.
இவர்களைத் தவிர, பா.ம.க.,வின் அன்புமணி ராமதாஸ், காங்., தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், அ.தி.மு.க.,வின் நவநீதகிருஷ்ணன், ஒய்.எஸ்.ஆர்., - காங்., கட்சியின் பரிமல் நாத்வானி, நியமிக்கப்பட்ட உறுப்பினர் நரேந்திர ஜாதவ், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் ஹிஷே லாச்சங்பா, ஆம் ஆத்மியின் சுஷில் குமார் குப்தா, திரிணமுல் காங்., கட்சியின் மனஸ் ரஞ்சன் பூனியா, ஐக்கிய ஜனதா தளத்தின் மஹேந்திர பிரசாத். நாகா மக்கள் முன்னணியின் கேன்யே, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் லக்ஷ்மிகாந்த ராவ் மற்றும் பந்த பிரகாஷ், உள்ளிட்டோரும் விடுப்பு கோரினர். இதை, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நேற்று தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “14 எம்.பி.,க்கள், விடுப்பு கோரியுள்ளனர். இதில், நரேந்திர யாதவ், பந்த பிரகாஷ் மற்றும் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று பேரை தவிர, மீதமுள்ள, 11 பேரும், இந்த ஒட்டுமொத்த கூட்டத்தொடரிலும் பங்கேற்க இயலாது என, விடுப்பு கோரியுள்ளனர்,” என்றார். இந்த, 14 எம்.பி.,க்களின் விடுப்புகளும், ராஜ்யசபா செயலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன