முதலிரவில் ரத்த தானம் செய்ய சென்ற மாப்பிள்ளை! விடிய விடிய காத்திருந்து மோசம் போன மணப்பெண்..
“முதலிரவின்போது ரத்ததானம் செய்ய போகிறேன்” என்று, சொல்லிவிட்டு சென்ற கணவனுக்காக, அவரது மனைவி விடிய விடிய காத்திருந்து மோசம் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலத்தில் தான் இப்படி ஒரு மோசடி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்ற இளைஞர், அங்குள்ள அடூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை முறைப்படி திருமணம் பேசி முடிவு செய்து உள்ளார்.
அதன் படி, அவர்கள் இருவருக்கும் கடந்த 30 ஆம் தேதி அன்று முறைப்படி அவர்களுக்குத் திருமணம் நடந்து உள்ளது.
இந்த திருமணத்திற்கு பிறகு, அன்றைய தினம் இரவில் இருவருக்கும் முதலிரவுக்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, அவர்களது முதலிரவின் போது, அந்த கணவன் தனது மனைவியிடம் சென்று, “எனது நண்பர் திடீரென்று விபத்தில் சிக்கிகொண்டு உள்ளார் என்றும், அவர் தற்போது ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருப்பதால் அவருக்கு உடனே ரத்தம் தேவைப்படுகிறது என்றும்” கூறி இருக்கிறார்
மேலும், “எனக்கும் அவருக்கும் ஒரே பிளட் குரூப் தான் என்று கூறி, நான் சென்று ரத்த தானம் செய்து விட்டு வருகிறேன்” என்று, தனது மனைவியிடம் சொல்லிவிட்டு அவர் வீட்டிலிருந்து கிளம்பி இருக்கிறார்.
அதன் படி, முதலிரவு நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற புது மாப்பிள்ளை, மறு நாள் காலையில் விடிந்த பிறகும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால், புதுமாப்பிள்ளையான கணவர் வருவார் என்று, அவரது மனைவியான புதுமனப்பெண் விடிய விடிய கட்டலில் காத்திருந்து உள்ளார்.
ஆனால், விடிந்த பிறகும் கணவன் வீட்டிற்கு வராத நிலையில், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது, அவரது செல்போன் சுவிட்ச்ஆப் என்று வந்திருக்கிறது.
அப்போது, வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம் காணாமல் போனதும் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் மற்றும் அவரது பெற்றோர், இது குறித்து உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர்.
போலீசாரின் இந்த விசாரணையில், புது மாப்பிள்ளை ரஷீத் பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
விசாரணையில், “மாப்பிள்ளை ரஷீத்துக்கு, ஆலப்புழாவைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பது” தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர் தற்போது 2 வதாக இந்த இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு, மோசடியாக பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
குறிப்பாக, முதலிரவை தவிர்த்துவிட்டு அவரது நகை மற்றும் வரதட்சணையாக வந்த பணம் 2 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, அந்த பெண் வீட்டில் இருந்து தப்பித்து சென்றதும் தெரிய வந்தது.
முக்கியமாக, 2 வதாக திருமணம் செய்த பெண்ணின் வீட்டில் இருந்து எடுத்துக்கொண்டுச் சென்ற பணம் மற்றும் அந்த நகைகளை ரஷீத், தனது முதல் மனைவி வீட்டில் அவற்றை பதுங்கியிருந்திருந்து உள்ளார்.
இதனையடுத்து, அங்கு விரைந்துச் சென்ற போலீசார், அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார், “இவர், வேறு ஏதேனும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா?” என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், கேரளாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.