என் சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலி தருகிறது- பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

என் சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலி தருகிறது- பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. - Daily news

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோருகளை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

anbilகோவையில் பிரபல தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி பொன்தாராணி தற்கொலை சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டு வந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர்.  தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டதை அடுத்து, தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரை இன்று அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மாணவியின் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள், பெற்றோர்கள் கையை பிடித்து ஆறுதல் தெரிவித்தனர். குற்றம் செய்தவர்கள் எல்லோரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல் தெரிவித்துள்ளார்கள்.

அதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அதன் பின்னர்  அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள் .
  
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: மாணவியின் இந்த இழப்பு தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் இழப்பாக கருத முடியாது என்றும் சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் இதற்கான நீதி விசாரணை சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

மேலும் ஏற்கனவே அரசு பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றோம்.  அதை மேலும் விரிவுபடுத்தப்பட்டு தனியார் பள்ளிகளிலும் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும். இனி இது போன்ற நிகழ்வுகள் எந்த குழந்தைக்கும் நடந்துவிடக்கூடாது என அந்த மாணவி பொன்தாராணியின் தாயார் கூறினார். அதற்கு நிச்சயமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பொன்தாரணிக்கு அஞ்சலி: பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் , அரசியல் பிரமுகர்கள் பொன்தாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் நேரடி காட்சிகளை கீழ்க்காணும் galatta voice YouTube லிங்க்-ல் பார்க்கவும்.

Leave a Comment