ஆயுதமேந்த தொடங்கிய இந்திய ராணுவம்! போர் உருவாகிறதா..? எல்லையில் முழு உஷார்..
By Aruvi | Galatta | Sep 17, 2020, 06:55 am
எல்லையில் போபர்ஸ் ரக பீரங்கிகளுடன் ஆயுதமேந்த தொடங்கிய இந்திய ராணுவத்தின் புகைப்படங்கள் வெளியானதால், போர் உருவாகிறதா? என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்து உள்ளது.
சீன ராணுவம் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய எல்லைப் பகுதியான டோக்லாம் எல்லையில் தொடர்ந்து அத்து மீறிலில் இறங்கிய நிலையில், தற்போது கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் வரை இந்திய எல்லையான லடாக் பகுதி வரை தொடர்ந்து அத்து மீறிலில் ஈடுபட்டு வந்தது.
இதன் காரணமாக, எல்லையில் அமைந்து உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பங்காங் திசோ எரிக்கரை, சுசூல் உள்ளிட்ட பகுதிகளில் போர் மிகுந்த பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்திய எல்லையான லடாக் மட்டுமின்றி, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் டோக்லாம் எல்லைப் பகுதிகளையும் சீன ராணுவம் குறிவைத்துத் தொடர்ந்து அத்து மீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. இதனை நன்றாக அறிந்து உள்ள இந்திய ராணுவம், அந்த பகுதிகளில் ராணுவத்தைக் குவித்து வைத்து, சீனாவின் தொடர் நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
அத்துடன், கடந்த வாரம் சீன வீரர்கள் ஈட்டி உள்ளிட்ட அயுதங்களுடன் எல்லைப் பகுதியை நோக்கி நடத்து வரும் சேட்லைட் புகைப்படங்களும் வெளியானது.
குறிப்பாக, இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்குச் சீன தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சீனா சார்பில் கடந்த வாரம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இதன் காரணமாக, எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக, எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் போபர்ஸ் இலகு ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய, படைகளை இந்திய ராணுவம் எல்லையில் குவிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த போபர்ஸ் இலகு ரக பீரங்கிகள் மூலமாக, தாழ்வான மற்றும் அதிக உயர் இலக்குகளைக் குறிவைத்து மிக எளிதாகத் தாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ரக பீரங்கிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதும் சுலபம் என்பதால், இந்த ரக பீரங்கிகள் எல்லையில் தற்போது நிறத்துப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்து உள்ளதாகக் கருதப்படுகிறது.
எல்லையில், இந்தியாவின் பீரங்கி ஏந்தி நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளாதல், எந்நேரமும் போர் ஏற்படலாம் என்று, பலரும் பீதியில் உள்ளனர்.
ஒரு பக்கம் எல்லையில் அத்துமீறல்களை நடத்தி வரும் சீனா, மற்றொரு பக்கம், 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போர்க்கலை பற்றிய சீன புத்தகத்தைப் பின்பற்றிப் போரிடாமல் வெற்றி பெறும் தந்திரத்தை இந்திய எல்லாயான லடாக்கில் பின்பற்ற சீனா முயற்சிப்பாகதாக புதிய தகவலும் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே, கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் சீனா, இதே மாதிரியான தந்திரமான போக்கை கையாண்டது. தற்போதும், அதே போன்ற ஒரு தந்திரமான முறையைக் கையாண்டு வருவதாகவும், குறிப்பாக “கடுங்குளிரில் மலைகளில் கவால் காக்க வேண்டுமா?” என்பது மாதிரின இந்தி மொழியில் பாடப்பட்ட பாடல்களை ஒலிபரப்பு செய்து, ராணுவ வீரர்களின் மனதை மாற்றி, அவர்களை ஓய்வு எடுக்கச் சொல்லும் வகையிலான மிகவும் வித்தியாசமான முறையைச் சீனா தற்போது கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது.