பெண்களுக்கும் - விவசாயிகளுக்கும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன?
2022-2023 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கும் - விவசாயிகளுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதில், இந்திய வேளாண் துறையை நவீனப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் அடங்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார். அந்த சலுகைகள் பற்றி பார்க்கலாம்..
- பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்விற்கான திட்டங்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைக்கப்படும்.
- மகளிர் மேம்பாட்டிற்காக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.
- பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி திட்டம், ஊட்டச்சத்து திட்டம் மற்றும் வாத்சல்யா திட்டம் ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.
- பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி திட்டம், ஊட்டச்சத்து திட்டம் மற்றும் வாத்சல்யா திட்டம் ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிப்பு.
- கொரோனாவால் அனைத்து தரப்பு மக்களும் மன நலம் சார்ந்த பிரச்னைக்கு ஆளாகியுள்ளனர் என்பதால், தேசிய அளவில் மக்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க டெலி மருத்துவ வசதி உருவாக்கப்படும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.
- வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்.
- விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்களின் அளவு அதிகரிக்கப்படும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நம்பிக்கைத் தெரிவித்து உள்ளார்.
- விவசாயிகளிடம் இருந்து 1,000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு.
- வேளாண் நிலங்களை அளக்க, பயிர் சேதங்களை ஆராய ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
- அனைத்து நில பதிவுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
- நீர்ப்பாசன திட்டங்களுக்காக 8.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
- இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டம் வழங்கப்படும்.
- அறுவடைக்கு பிறகு பயிர்க்கழிவுகள் எரிப்பதை தடுக்க திட்டங்கள் உருவாக்கப்படும்.
- 44 ஆயிரம் கோடி ரூபாயில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
- எண்ணெய் வித்துகள் இறக்குமதியை குறைக்க உள்நாட்டிலேயே எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரிக்கப்படும்.
- நாட்டில் ரசாயனம் அற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்றும், வேளாண் நிலங்களை அளக்க, பயிர் சேதங்களை ஆராய ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபடத் தெரிவித்து உள்ளார்.
- நதிகள் இணைப்பு தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
- காவிரி - பெண்ணாறு இணைப்பு திட்டம் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுக்கு பின் நிறைவேற்ற நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.
- விவசாயிகளுக்கு டிஜிட்டல் மற்றும் ஹைடெக் சேவைகளை வழங்க PPP Mode முறையில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- குழந்தைகளின் உடல்நலனை மேம்படுத்த 2 லட்சம் அங்கன்வாடிகளின் தரம் உயர்த்தப்படும்.