“லிவ் இன் லைஃப்” கர்ப்பிணி காதலியை கவனிக்க ஜாமீன் கைதிக்கு கிரீன் சிக்னல்!
“லிவ் இன் லைஃபில் என்னுடன் வாழ்ந்து வந்த எனது காதலி கர்ப்பிணியாக இருப்பதால், அவரை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்பதால், எனக்கு ஜாமீன் வேண்டும்” என்று, கைதிக்கு நீதிமன்றம் கிரீன் சிக்னல் அளித்துள்ளது, பெரும் வைரலாகி வருகிறது.
தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த ஒருவர், உளவுத் துறை மற்றும் ரா அமைப்பின் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்த குற்றத்திற்காகவும் மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பின்னர், விசாரணைக்குப் பிறகு, அவர் டெல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
அத்துடன், இது தொடர்பான வழக்கில் அவரின் காதலியும் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஆனால், இந்த நபரும், இவரது காதலியும் திருமணம் செய்துகொள்ளாமல் “லிவ் இன் லைஃப்” முறையில் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
அப்படியான சூழலில் தான், இந்த லிவிங் லைப் காதலர்கள் இருவரும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த காதலி மட்டும் தற்போது ஜாமீனில் வெளியே வந்து உள்ளார்.
இந்த நிலையில் தான், அந்த காதலி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
அதே நேரத்தில், அந்த இளம் பெண் இரு வீட்டு பெற்றோரின் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல், 95 வயதான தாத்தா - பாட்டியுடன் வசித்து வருகிறார்.
இதனால், “நிறைமாத கர்ப்பிணியாக உள்ள தனது காதலியின் பேறுகாலம் நெருங்கி வருவதால், தனியாக உள்ள கர்ப்பிணி காதலியை கவனித்துக்கொள்ள எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று, சிறையில் உள்ள அந்த பெண்ணின் காதலன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், “தாத்தா - பாட்டியின் உடல் நிலையை கருத்தில்கொண்டு நிறைமாத கர்ப்பிணியான பெண்ணுக்கு வேறு துணை இல்லாத காரணத்தை கருத்திக்கொண்டும், சிறையில் உள்ள அந்த பெண்ணின் காதலனுக்கு 3 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி” நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டு உள்ளது.
ஆனால், அந்த காதலன் 30 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையை செலுத்திவிட்டு, ஜாமீனில் செல்லும்படி நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.
அதே நேரத்தில், “விசாரணையின் போது, நீதிமன்றத்தல் ஆஜராக வேண்டும் என்றும், ஜாமீனில் செல்லும் போதும் மனுதாரர் தனது செல்போன் எண்ணை விசாரணை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும் என்றும்” அறிவுறுத்தி உள்ளது.
அதே போல், “அந்த செல்போன் எண்ணை, எப்போதும் ஆஃப் செய்யப்படாமல், அதில் லொக்கேஷன் அமைப்பு எப்போதும் செயல்பாட்டில் இருக்க வேண்டும்” என்றும், ஜாமீன் அளித்தவருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.