கடும் குளிரிலும் ஒரு மாதத்தை எட்டியிருக்கும் விவசாயிகள் போராட்டம்; பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் மோடி!
By Abinaya | Galatta | Dec 26, 2020, 10:32 am
குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் மற்றும் மண்டி அமைப்பு ஆபத்து இருக்காது என மத்திய அரசு உறுதியளித்தாலும், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலுயுறுத்தி டெல்லியில் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. கடும் குளிரிலும் போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டு இருக்கிறது. எதிர்கட்சிகள் விவசாயிகளை திசை மாற்றுவதாக மத்திய அரசு குற்றசாட்டுகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க பேரணியாக குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பேரணியாக சென்ற போது கைது செய்யப்பட்டனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சு வார்த்தை தொடர்ந்து தோல்வியே சந்தித்து வருந்தது.
ஒரு மாதத்தை எட்டியிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தில் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொள்கிறன அரசியல் கட்சிகள். போராட்டத்தில் பாஜவுக்கு எதிராகவும், அதானி, அம்பானிக்கும் எதிராகவும் விவசாயிகள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், ‘’ வேளாண் சட்டங்களை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்கிறது. பொய் பரப்புரைகளையும், கட்டுக்கதைகளையும் பரப்பிவிடுகிறது. சில கோரிக்கைகளுடனே முதலில் விவசாயிகள் டெல்லி வந்தனர், அவர்களை எதிர்கட்சிகள் திசைமாற்றிவிட்டனர். மத்திய அரசு விவசாயிகளுக்கு இருக்கும் அனைத்து சந்தேகளுக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறது. திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. விவசாய சங்க அமைப்பு பேச்சு வார்த்தைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்’’ என மோடி தெரிவித்து இருக்கிறார்.
அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் விவசாயிகள், மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என கோரி வருகிறார்கள். இதனால் அனைத்து கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியே அடைந்து வருகிறது.